500 கோடி செலவில் மகளுக்கு மேரேஜ் செய்து வைத்த ஜனார்த்தனம் ரெட்டி டிரைவர் சூசைட்

பா.ஜ.க.வைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் சுரங்க அதிபர் ஜனார்த்தனரெட்டி, இவர் சில தினங்களுக்கு முன் 500 கோடி ரூபாய் செலவில் மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தனர்.

jan reddy dec 8

இந்நிலையில் ஜனார்த்தனரெட்டியின் கார்   டிரைவர் ரமேஷ் கவுடா என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் ரமேஷ் கவுடா எழுதிய கடிதத்தில் ஜனார்த்தனரெட்டி 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரி பீமான்நாயக் என்பரை பயன்படுத்தி மாற்றியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதற்காக பீமான்நாயக்கருக்கு 20 சதவீதம் கமிஷ்ன தொகையை ஜனார்த்தனரெட்டி கொடுத்ததாகவும் தனது தற்கொலை கடித்தில் ரமேஷ் கவுடா குறிப்பிட்டுள்ளார். தனது தற்கொலைக்கு ஜனார்த்தனரெட்டி கொடுத்த கடும் மனஉளைச்சலே காரணம் என்று ரமேஷ் கவுடா குற்றம்சாட்டியுள்ளார்.

மிக ஆடம்பரமாக நடந்த ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அவரது வீடு மற்றும் சுரங்க தொழிற்சாலையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுரங்க மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் மகள் திருமணத்திற்காக நிபந்தனை ஜாமீன் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.