January 23, 2022

ஹார்வார்டு தமிழ் இருக்கை என்பது மிகப்பெரிய ஊழல்: அய்யாதுரை

 

உலகில் சுமார் 7102 மொழிகள் உள்ளன. இவற்றுள் 7 மொழிகளை பாரம்பரிய/தொன்மை மொழிகளென வகைப்படுத்தியுள்ளனர், மொழி ஆராய்ச்சியாளர்கள். இவை சமஸ்கிரதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், பாரசீகம் மற்றும் நமது தமிழ் மொழி. இந்த 7 மொழிகளில் 6 மொழிகள் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகின்றன. ஆனால் தொன்மையும், நுண்மையும், வன்மையும் மென்மையும், செம்மையும், செழுமையும், வளமையும், இளமையும், ஈடில்லா இலக்கணக் கட்டமைப்பும், இணையில்லா இலக்கியச் சிறப்பமைப்பும் தன்னகத்தே கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு இதுவரை அங்கு நிரந்தர இருக்கை இல்லை. எட்டு கோடிக்கு மேற்பட்ட ஓர் இனம் பேசும் மொழி இன்னும் சிம்மாசனம் ஏற்றப்படாமலே சிறைபட்டு நிற்கிறது. இதனால் மருத்துவர்கள் ஜானகிராமன் , திருஞான சம்பந்தம் , விஜயலட்சுமி மற்றும் சங்கத் தமிழுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்து கொண்டிருக்கும் வைதேகி ஹெர்பர்ட் கூறிய ஆலோசனைப்படி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நிரந்தர தமிழ் இருக்கை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துடன் உரையாடல்கள் நடத்தி தங்கள் சொந்த பணம் தலா 500 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலுத்தி இந்த ஹார்வர்ட் தமிழ் இருக்கையெனும் விதையை தமிழுக்காக விதைத்தனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நிரந்தர தமிழ் இருக்கைக்காக கேட்டிருப்பது 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த 6 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 3.5மில்லியன்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் செயற்குழு, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களால் திரட்டப்பட்டுவிட்டது. மேலும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை தமிழக அரசு கொடுத்துள்ளது. இன்னும் 1 மில்லியன் டாலர்கள் ஜூன் 2018 க்குள் தேவைப்படுகிறது.  இதையொட்டி பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.. இந்நிலையில்   ஹார்வார்டின் இணை நிறுவனர் ஹார்வார்டின் நடைமுறைகளை அறிந்த பின்னர் தற்போது பின்வாங்க தொடங்கியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இருக்கை குறித்த சர்ச்சையை முன்னரே நம் ஆந்தை தளத்தில்  ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை? அது தேவையே இல்லைங்கறேன்!    

மசாசெட்ஸ் தேர்தலில் 2018ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட உள்ள, ஈமெயில் கண்டு பிடிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப குருவான முனைவர் சிவா அய்யாதுரை,  ஹார்வார்டு தமிழ் இருக்கை மூலம் டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பழங்கால கலைப்பொருட்களின் தகுதி விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளார்.   என்ற தலைப்பில் ஒரு ரிப்போர்ட் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது..  ஹார்வார்டு பல்கலை நிதி அறிக்கைகளின் படி, அப்பல்கலை கழகமானது ஒரு வரிவிலக்கு பெற்ற 35 பில்லியன் டாலர் அளவுக்கு பணம் மற்றும் முதலீடுகளை கொண்ட அமைப்பாகவே இருந்து வருகிறது. ஆனாலும் உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்களி டமிருந்தும், ஹார்வர்ட் அமைப்பு பற்றி ஒன்றுமே தெரிந்திராத நபர்களிடமிருந்து 6 மில்லியன் டாலர்களை தங்களுடைய 35 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை தக்கவைத்துக்கொள்ள சேகரிக்க முயன்றது. சுமார் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியானது பல்வேறு கலைகள், கவிதைகள், கலாச்சாரங்கள், பல்வேறு மருத்துவக் குறிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களை கொண்ட ஓலைச்சுவடிகளை கொண்ட மொழியாக இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளவர்களால் பேசப்பட்டு வருகிறது.

முனைவர் அய்யாதுரையை பொருத்தவரை, ‘’ அமைப்பதற்கான பெயரில் நிதி திரட்டும் முயற்சியானது ஹார்வார்ட்டின் சுரண்டல்களில் ஒன்று. உங்கள் சொந்த வீட்டை கொள்ளையடிப்பதற்கு ஒரு ஏணி வாங்க, கொள்ளையர்கள் உங்களிடமே பணம் கேட்பது போன்ற ஒரு நிகழ்வு தான் இது. உலகின் மிக உயர்ந்த பரிசுத்தமான புத்தகத்தில் குறிக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தங்களது சொந்த வரலாற்று கலைகளை கொள்ளையடிக்கும் ஒரு பேராசிரியர் பொறுப்புக்கு 6 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று தமிழர்களை ஹார்வர்ட் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஹார்வர்டு அமைப்பு எப்படி  பலரின் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் மாற்றி அமைத்ததோ, அதுபோல தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பன்பாடுகளை மாற்றியமைக்கும்.

ஹார்வர்டு அமைப்பின் பொருளாதார அறிக்கைகளின் படி அந்த அமைப்பு ஒரு வரிவிலக்கு பெற்ற அமைப்பாகவே இருக்கிறது. இந்த அமைப்புக்கு கூட்டு பங்குகளுடன், இதர பங்குகளும் சேர்த்து மொத்தம் 35 பில்லியன் டாலர் சொத்து உள்ளது. இந்த அமைப்பின் பங்குகள், கூட்டு பங்குகளின் 2 பில்லியன் டாலர் ஏற்றத்துடன் சேர்த்து மொத்தம் 7 பில்லியன் டாலர் ஏற்றம் கண்டன. இதில் ஒரு உண்மை மட்டும் வெளிவருகிறது. அங்குள்ள பேராசிரியர்கள், ஹார்வர்டு அமைப்பின் பங்குகளின் மதிப்புகள் உயர்வதற்கு, நிதி கொடையாளர்கள் பலரை ஈர்க்கும் பணியை மட்டுமே செய்து வருகின்றனர். 2017ம் ஆண்டு போஸ்டான் குளோப் தகவலின் அடிப்படையில் ஹார்வார்டு அமைப்பின் பங்குதாரர்களின் ஒருவர் 58 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் பார்த்துள்ளார்.

இதற்கு பின்னால் நவுஷர்ட் காடெரை தலைவராக நியமித்ததோடு, அவருக்கு வானளாவிய அளவுக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதே காரணமாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘’எண்ணிக்கைகள் கூறுவது போல, ஹார்வார்டு பல்கலை என்பது கூட்டு பங்குகள் வருவாயின் பெரும்பகுதிகளை மறு முதலீடு செய்வதன் மூலம், அது உலகின் புகழ்பெற்ற கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனமாக தோற்றமளிக்கிறது. ஹார்வார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஹார்வார்டு இன்சைடர் நெட்வொர்க்கை அணுகும் போது, அவர்களது குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம், ‘கிளப்பில் சேர்வதற்கு’ கட்டாயப்படுத்தப்படுவதன் மூலம் இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. இவை பற்றி ஊடகங்களில் அரிதாகவே விவாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாணவர்கள் சேர்க்க என்பது சிபாரிசு மூலமாகவோ அல்லது அளிக்கப்பட்ட நன்கொடை மூலமாகவோ தான் நடைபெற்றுள்ளது’’ என்றும் தெரிவித்தார்.

முனைவர் அய்யாதுரையின் இந்த கருத்துக்கள் சமூகவலைதளங்களில் கருத்துவேறுபாடுகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளது. ஹார்வார்டு ஏன் இன்னும் செயல்படுகிறது என்கிற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது. ஹார்வார்டு பல்கலை ஆராய்ச்சி மையமாக செயல்படுகிறதா ? அல்லது, கல்வி கற்றுக்கொடுக்கும் மையமாக செயல்படுகிறதா ? தமிழுக்கு இத்தகைய முக்கியத்துவம் அளிக்கும் ஹார்வார்டு பல்கலை, ஏன் அது குறித்து ஆராய்ச்சி செய்ய தனது அமைப்பு தரப்பில் 6 மில்லியன் டாலர் ரூபாய் அளிக்க முன்வரவில்லை ?

ஹார்வார்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்காக 6 மில்லியன் டாலர் நிதியை பெற்றுத்தர முயன்ற தமிழ் இருக்கைக்கான ஹார்வார்டின் இணை நிறுவனர் விஜய் ஜானகிராமன், அய்யாதுரையுடன் பேசாதவரை ஹார்வார்டு பல்கலையின் தொழில் தந்திரங்கள் பற்றி தனக்கு தெரியாது என்றும், பேசிய பிறகு தான் ஹார்வார்டு பல்கலை கழகம் இன வேறுபாடு, ஊழல் மற்றும் பூர்வகுடி மக்களின் சுரண்டல்களை கொண்டது என்று தெரிய வந்ததாக கூறுகிறார். ஹார்வார்டுக்கு நிதி அளிப்பதன் மூலம், தமிழ் இருக்கை அமைப்பதற்கு தான் கடுமையாக உதவியதாக தான் விஜய் ஜானகிராமன் நினைத்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பூர்வகுடி மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை அழிப்பதோடு, அவர்களின் உரிமைகளை பறித்து, அதை மாற்றுவது தான் ஹார்வர்டு பல்கலையின் வரலாறுகளாக உள்ளன. 2011ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலை, தனது கூட்டு பங்குகள் மூலம் பூர்வகுடி மக்களின் விவசாய நிலத்தை பறிக்க முயன்ற சம்பவமே இதற்கு ஒரு சான்றாக உள்ளது. ஹார்வர்டு தமிழ் இருக்கை என்பது அரிய மற்றும் பழமையான ஓலைச்சுவடிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தமிழக மக்களின் பூர்வ குடி தகவல்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஹார்வார்டுக்கு உதவியிருக்கும்.

சுப்பிரமணியன் சாமி, ஹார்வர்டின் தவறான அணுகுமுறையை எடுத்துக்காட்டியதன் மூலம் அவருக்கு எதிராக ஹார்வார்டு அமைப்பு மிக கேவலமான தாக்குதல்களை கையாண்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் ஒருவரை அவர்கள் எப்படி கையாண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் பார்க்கலாம். ஹார்வார்டு அத்தோடு நிற்காமல், சுப்பிரமணியன் சுவாமி எழுதிய பல்வேறு புத்தகங்களையும் தங்களது தொகுப்புகளில் இருந்து நீக்கி, அவருக்கு அவமரியாதை செய்தது.

எலிசபெத் வாரென் என்பவரின் உதவியை நாடுவதற்காக பல்வேறு நேரங்களிலும் ஹார்வார்டு பல்கலை தனது கூட்டு பங்கு தொகையை ஏலத்திற்கு விடும். ஹார்வார்டு பல்கலையில் ஒரு படிப்பை கற்றுக்கொடுக்க அவருக்காக 350,000 டாலர்களை ஒரு வருடத்திற்கு ஹார்வார்டு பல்கலை அமைப்பு செலவு செய்தது. முனைவர் அய்யாதுரையின் இந்த தலையீடு என்பது, உலக தமிழர்களுக்கு உதவிடும் செயலாகவே அமைந்துவிட்டது. முனைவர் ஜானகிராமன், அய்யாது ரையுடன் பேசிய பிறகு தற்போது ஹார்வார்டு பல்கலைக்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்டார். அவர் அய்யாதுரையிடம், நீங்கள் ஒரு முன்னுதாரன நபர். நான் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லி எனக்கு உதவுங்கள் என்று கேட்டுள்ளார்.

முனைவர் அய்யாதுரையின் திட்டம் என்பது முதலில் உலகில் உள்ள அத்தனை தமிழர்களின் உதவியுடன் உலகின் முதல் தமிழ் ஆன்லைன் பல்கலையை TamilNadu.com மூலம் ஆரம்பிப்பது தான். உலகின் தலைச்சிறந்த வல்லுநர்களால் தமிழை கற்க துடிப்போருக்கு பல்வேறு முறையில் கற்றுக்கொடுக்கவும் பணிகள் நடக்கின்றன. இது ஹார்வார்டு தமிழ் இருக்கையை விட மிக நுணுக்கமான முறையில் தமிழ் மொழியை வளர்க்க உதவும்.

ஹார்வார்டு பல்கலையின் ஜொனாதன் ரிப்லே இது தொடர்பாக தமிழ் மொழி குறித்து வெளியிட்டுள்ள வீடியோவே இதற்கு சாட்சி. சொல்லகராதி என்பது மிகச்சிறிய வார்த்தைகளுக்குள் சுறுக்கப்பட்டுவிட்டது. ஆம், இல்லை, அது, இது, என்ன ? கை, கால், பல், கல், பை மற்றும் பாலை என குழந்தைகள் பேசும் அளவுக்கு இருக்கும். TamilNadu.com மூலம் தமிழ் ஓலைச்சுவடிகளின் உள்ள தகவல்களை உலக தமிழர்கள் அறிவதோடு, அது ஹார்வார்டு கொள்ளை முறைகளை தடுக்கும் முறைகளையும் கொண்டுள்ளதாக இருக்கும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அய்யாதுரை, ‘ஹார்வர்ட் என்பது ஒரு கொள்ளையடிக்கும் நிறுவனம் ஆகும், பொதுமக்கள் செலுத்தும் வரிகளை கொண்டு, தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, தங்களின் பெயரில் ஒரு சமூக கல்லூரி நடத்தவேண்டும் என்கிற தங்களின் கொள்கையை நிறுவேற்றுவதே அவர்களின் எண்ணம். அவர்களின் போதனை என்பது ஒன்று இடைக்காலமானதாக இருக்கும் அல்லது எப்போதோ மாறுபட்டவையாக இருக்கும். அவர்கள் எங்களை விட பலமடங்கு அனைத்தையும் தெரிந்துள்ளார்கள் என்று நம்பக்கூடியவர்கள். ஹார்வார்ட் ஆசிரியர்களின் இன மற்றும் மத அமைப்புகள் மூலமான பேரினவாத பணியிட நடைமுறைகள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்திடவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் விஞ்ஞானியாக உள்ள அய்யாதுரை, மின்சாதனம் மூலம் குறுந்தகவல் அனுப்பும் ஈமெயில் என்கிற முறையை கண்டுபிடித்தவர் ஆவார். இதை தவிற்த்து அவர் இருவேறு புத்தகங்களும் எழுதியுள்ளார். அதில் முதலாவது, இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞான அமைப்பின் பணி நிலைமைகள் குறித்த கேள்விகளுடனும், மற்றொன்று மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுடனும் இருந்தன. எம்.ஐ.டி மூலம் 4 பட்டங்களை அய்யாதுரை பெற்றுள்ளார். 2018 அமெரிக்க செனட் தேர்தலில் மசாசெட்ஸ் தேர்தலில் போட்டியிடும் எலிசபெத் வாரென்னுக்கு எதிரான சுயேட்சை வேட்பாளராக இவர் களமிறக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிவா அய்யாத்துரையின் கருத்துகள், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பினையும் சற்று அதிர்ச்சியையும் அளித்தது. இதுகுறித்து நண்பர்கள் சிலர் அவரைத் தொடர்பு கொண்டபோது, விரிவான விளக்கம் ஒன்றையும் அளித்தார் மருத்துவர்.ஜானகிராமன்.

இது குறித்து .ஜானகிராமன்அவர் பேசும்போது, ‘சிவா அய்யாத்துரை என்பவர் என்னுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பேச விரும்புவதாக நண்பர்களும் என்னிடம் தெரிவித்தனர். நானும், ‘ ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிப்பதாக இருந்தால், பேசுவது மட்டுமல்ல நேரில் சென்று அவரைக் காணவும் தயாராக இருக்கிறேன். காரணம், ஹார்வர்டுக்கு அளிக்கும் தொகை சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அந்தத் தொகை அளிப்பவரின் உள்ளத்தை மட்டும்தான் நான் எண்ணிப் பார்ப்பேன். அதேநேரம், ‘எனக்கு அறிவுரை கூற வேண்டும்’ என அவர் விரும்பினால், அவரிடம் ஒன்றை மட்டும் சொல்வேன். பல அறிவுரைகளைக் கேட்டுத்தான் இந்த முயற்சியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். தமிழ் இருக்கைக்கான 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன. எங்களுக்குத் தேவையான 60 லட்சம் டாலரில் 54 லட்சம் டாலர்களைப் பெற்று விட்டோம். இன்னும் 6 லட்சம் டாலர்கள்தாம் பாக்கியிருக்கின்றன. எனவே, இந்த நிலையில் இதனைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவும் இல்லை’ என்றேன்.

இதன்பின்னர் என்னைத் தொடர்பு கொண்டார் சிவ அய்யாத்துரை. தொலைபேசியில் ஒருவர் இணைப்பில் வந்த பிறகு, பேச முடியாது எனச் சொல்வதில் நியாயம் இல்லை. ‘நீங்கள் தமிழ் இருக்கைக்குச் செலவழிப்பது வீண்’ என்றார். ‘ ஏற்கெனவே நாங்கள் எடுத்த முடிவுகளின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும் என்பதால் நீங்கள் கூறும் தகவலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்’ என பதிலளித்தேன். இந்தத் தகவலை அவர் வேறு வடிவில் வெளிப்படுத்திவிட்டார்.

பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஒரு முக்கியமான விஷயம், ஹார்வர்டு தமிழ் இருக்கை என்பது எனக்கோ திருஞான சம்பந்தத்துக்கோ சொந்தமானது கிடையாது. அது லட்சோப லட்சம் தமிழர்களுக்குச் சொந்தமானது. இதற்காக நன்கொடை அளித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். சிறந்த காரியம் என்று உளமாற நானே உணர்ந்திருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நன்கொடை மூலம் தொடங்கவிருக்கும் தமிழ் இருக்கை குறித்து நான் ஒருவன் மட்டும் வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டேன். இதுதெரிந்த பின்பும், இப்படிப்பட்ட தவறான பதிவினை அவர் வெளியிட்டது வருந்தத்தக்கது. இதைப் பற்றி வேறு எந்த விவாதத்திலும் ஈடுபடுவது பயனற்றது’ என சொல்கிறார்.