எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மகளிர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!

ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்த நாள் இது என்றே சொல்ல வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நட்த்த வந்தோம் என்ற பாட்டு சித்தன் பாரதியின் வரிகளுக்கேற்ப வீட்டிற்குள் இருந்த பெண் சமுதாயம் வானை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டது பல்வேறு பெண்களின் போராட்டங்களும், அதன் வெற்றியுமே.

அதன் வெளிப்பாடாகவே உலக மகளிர் தினமாக மார்ச் 8 ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பல வியாபார நிறுவனங்களின் கொண்டாட்ட தினமாகவும், சலுகை தள்ளுபடிகளை அறிவிக்கப்படும் நாளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு கோலப்போட்டி, அழகு சார்ந்த போட்டிகள், ராம் வாக் (Ram Walk) போன்ற நிகழ்ச்சிகள் நட்த்தப்படும் நிலையில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “இந்தியாவின் பலம் மகளிரே’ , என்பதை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழக அடையாளம்பட்டு வளாகத்தில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மற்றும் கல்வி பயிலும் 4003 மகளிரை மட்டுமே வைத்து, திருமதி. லலிதா லட்சுமி சண்முகம் , நிர்வாக அறங்காவலர் அவர்கள் தலைமையில், பல்கலைக்கழக தலைவர் அருண்குமார் அவர்கள் முன்னிலையில் இந்திய வரைபடம் (மனித வரைபடம்) அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் சம்பவங்களுக்கு எதிராக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.