மோப்ப நாய்களை மொத்தமாக கொன்ற அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் மீதான சர்ச்சை!

மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின் நோய் பாதிப்பை கூட ஆரம்பத்திலேயே நாய்கள் கண்டுபிடித்து விடும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்தது நினைவிருக் கும். குறிப்பாக புற்றுநோயை நாய்கள் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. புற்றுநோய் பாதித்த மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும், ஆரோக்கியமான மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் பாதித்தவர்களின் மூச்சு காற்றில் உள்ள ரசாயன வாசனையை வைத்து மோப்ப நாய்கள் நோயாளியை கண்டுபிடிக்கின்றன. இதற்காக 2 ஜெர்மன் ஷெப்பர்ட், ஆஸ்திரேலிய ஷெப்பர்ட், லேப்ரடார் என 4 நாய்களுக்கு விசேஷ பயிற்சி அளித்தார்கள். நோயாளிகளின் மூச்சுக்காற்றை நாய்கள் மோப்பம் பிடித்து 100 பேரில் 71 பேரை அடையாளம் காட்டின. அதேபோல் நுரையீரல் புற்றுநோய் பாதிக்காத 400 பேரில் 372 பேரை சரியாக அடையாளம் காட்டின. நுரையீரல் புற்றுநோய் பாதித்த மனிதர்கள் வெளிவிடும் மூச்சுக் காற்றில், எந்த வகையான ரசாயனம் கலந்துள்ளது. அதை நாய்கள் எப்படி கண்டுபிடிக்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது.

dog june 25

இதனிடையே குவைத்தில் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் 24 வெடிகுண்டு மோப்ப நாய்களை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவதுஅமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான ஈஸ்டர்ன் செக்யூரிட்டி குவைத்தில் உள்ள தேசிய எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வந்தது.மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத குழுவினரிடம் இருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் நிறுவனங்கள் மோப்ப நாய்களையும் பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளது.

இந்நிலையில்தான் குவைத் தேசிய பெட்ரோலிய நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, செக்யூரிட்டி குவைத்தில் நிறுவனத்தில் பயன்படுத்திய மோப்ப நாய்களை மொத்தமாக கொன்று தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இச்சம்வத்தை அடுத்து மிருகவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமானது குறைந்தபட்சம் 24 நாய்களையாவது கொன்று குவித்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பாதுகாப்பு நிறுவனம் மீது வழக்கு பதிய வேண்டும் என வாதிட்டுவரும் மிருக ஆர்வலர் ஒருவர், அந்த நிறுவனம் 90 நாய்கள் வரை கொலை செய்திருக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.

ஆனால் நாய்களின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து கொலை செய்துள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாய்கள் அனைத்தையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த நிறுவனமானது விலங்குகள் நல குழுவினரிடம் அந்த நாய்களை தத்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு அவர்கள் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.