Exclusive

பன்னாட்டுத் தொழில் நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை – ஒரு பார்வை!

ன்னாட்டுத் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் செய்திகளைப் பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதில் குறிப்பாக என்னை ஆச்சரியப்படுத்தியது இது கேபிட்டலிசத்தின் தோல்வி என்று செய்யப்படும் பரப்புரைகள். இதை செய்வது சோஷலிச, கம்யூனிச ஆதரவாளர்கள். அவற்றைப் பார்க்கும் போது ‘நான் எட்டாவது பாஸ்ண்ணே. நீங்க எஸ்எஸ்எல்சி ஃபெயில்,’ என்ற ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவின் பொருளாதார தேக்கத்துக்கு அந்த நாட்டு மத்திய அரசின் நிதி மேலாண்மைக் கொள்கைகள்தான் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.[1] ஆனால் அதையே கூட தள்ளி வைத்து விட்டுப் பார்த்தாலும் கேபிட்டலிசம் என்பது ஏற்ற இறக்கங்கள் அறவே அற்ற ஒரு மாடல் என்று யாருமே எப்போதுமே சொல்லியதில்லை. ஆனால் நவீன உலகில் கேபிட்டலிசம் கொண்டு வந்த அளவுக்கு பொருளாதாரப் புரட்சியை வேறு எந்த சிஸ்டமும் கொண்டு வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

சோஷலிசக் கொள்கைகள் காரணமாக எண்பதுகளில் கடன் தவணை கூட கட்ட முடியாமல் இந்தியப் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருந்தது. அவமானத்தின் சிகரமாக ரிசர்வ் வங்கியின் தங்கங்களை பிளேனில் ஏற்றி இங்கிலாந்தில் கொண்டு போய் அடகு வைத்தோம். அப்படி இருந்த இந்தியா இன்றைக்கு உலகின் மூன்றாம் பெரிய பொருளாதாரமாக உருமாறி இருப்பதற்கு சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம். தொண்ணூறுகள் முதல் இந்தியாவில் சுமார் 60 கோடிக்கும் மேற்பட்டவர்களை கொடும் வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம். சாதி ஒழிப்பிற்கும், பெண் முன்னேற்றத்துக்கும், ஏன் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமையை மீட்டதிலும் கூட சந்தைப் பொருளாதாரத்துக்கு பங்கு இருக்கிறது. [2]

சீனாவும் கூட சோவியத்தை விடத் தீவிரமாக கம்யூனிசம் பேசிய கால கட்டத்தில் மா சேதுங்கின் பொருளாதாரக் கொள்கைகள் கொண்டு வந்த செயற்கைப் பஞ்சத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடிப் பேர் மாண்டு போனார்கள். அதையெல்லாம் துறந்து எழுபதுகளின் இறுதியில் சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவிய சீனா இன்று அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் அளவு வளர்ந்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்க, வேலை கிடைப்பதும் வேலை போவதும் கேபிடலிசத்தின் அங்கங்கள். நிறுவனங்கள் எப்படி தாமாக ஊழியர்களை அனுப்ப முடியுமோ அதே அளவுக்கு ஊழியர்களும் தாமாக வேலையைத் துறந்து வேறு வேலைக்குப் போகலாம். பாண்டெமிக் துவங்கி சில மாதங்களில் தனியார் நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான ஊழியர்கள் வேலையை விட்டுத் தாமாகவே நீங்கி இருந்திருக்கிறார்கள். இதற்கு Great Resignation என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இது குறித்து நானே கூட எழுதி இருக்கிறேன்.

ஒரு ப்ராஜக்ட் மேனேஜராக ரெண்டு மூணு ப்ராஜக்ட்டுகளை நிர்வகித்துப் பார்த்திருந்தால் இப்படி சடக்கென ஊழியர்கள் வேலையை விட்டு வெளியே போவதின் வலி தெரியும். ஆனால் அப்போதெல்லாம் யாரும் ஊழியர்களை இழந்த நிறுவனங்களைப் பற்றி, அவர்களின் தொங்கிப் போன ப்ராஜக்ட்டுகள் பற்றி கவலைப்பட்டு பதிவு எழுதி நான் பார்க்கவில்லை. அதாவது, ஊழியர்கள் தாமாக வேலையை விட்டு நீங்கினால் அதில் பாதிப்புற்ற கம்பெனி பற்றிய கவலையே நமக்கு இருப்பதில்லை. ஆனால் கம்பெனி நீக்கினால் மட்டும் திடீரென சோஷலிச, கம்யூனிச உணர்வுகள் கொழுந்து விட ஆரம்பித்து விடுகிறது.

2008ல் சர்வதேச வங்கி நிதிச் சிக்கல் வந்த போது இதே போன்ற வேலை நீக்கம் நடந்தது. அதற்குப் பின் நிலைமை சீரடைந்த பின்னர் லட்சக் கணக்கான பேரை அதே நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தன. இப்போது வந்திருக்கும் பொருளாதாரத் தேக்கத்துக்கு உக்ரைன் போர், கொரோனா, உலக அரசுகளின் நிதிக் கொள்கை என்று பல்வேறு காரணிகள் இருக்கின்றன. ஆனால் அதையும் முறியடித்து கேபிடலிசம் முன்னேறும். மறுபடி லட்சக்கணக்கான பேரை வேலைக்கு எடுக்கும். மறுபடி வறுமை ஒழிப்பு தொடரும். மறுபடி வேலை நீக்கம் நடக்கும். இதுதான் பொருளாதார சுழற்சி. வாழ்வின் சுழற்சியும் கூட. கேபிடலிசம் குறைகளே அற்ற சிஸ்டம் இல்லவே இல்லை. அதற்கு மாற்று வேண்டுமானால் புதிதாக ஒரு சிஸ்டம் எதையாவது உருவாக்கி அதை முன்னெடுக்க முயலுங்கள். கொஞ்ச நாள் அதை பரிசோதனை செய்து பார்ப்போம். ஆனால் தயவு செய்து சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் கொண்டு வராதீர்கள். அந்த ஃபோன்களின் வயர்கள் பிஞ்சிப்போய் பல பத்தாண்டுகள் ஆகின்றன.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

aanthai

Recent Posts

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…

12 hours ago

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

1 day ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

2 days ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

2 days ago

பொம்மை நாயகி -விமர்சனம்!

இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…

2 days ago

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு செயலியும், இன்ன பிறவும்!

இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…

2 days ago

This website uses cookies.