Exclusive

டான் – (முதல் நாள் முதல் காட்சி) விமர்சனம்!

றிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படம் வெளியாகி உள்ளது. முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறி விட்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகாலை 4 மணிக்கே ஸ்பெஷல் ஷோ, FDFS கொண்டாட்டம் என தியேட்டர்கள் களைகட்டி உள்ளன. அதிலும் சிவகார்த்திக்கேயன் கேரியரில் மொத முறையா ரொம்ப அட்வான்ஸா KDM எனப்படும் ரீல் பெட்டிகள் எல்லாம் போனது இதுவே முதல் முறை. போன படம் வரை ரிலீஸூக்கு முதல் நாள் விடிய விடிய பஞ்சாயத்து செய்தே பழகிய சிவகார்த்தி நாலு மணி ஷோ-வுக்கு ஹேப்பியா வந்தார்.

சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்கோணுமுன்னு ஆசைப்படறார். ஆனா, சிவகார்த்திகேயன் மகனாக பிறந்து ஏமாற்றம் அடைந்ததால், சிவகார்த்திகேயன் மீது வள்வள்ளென்று உறுமலுடன் ஸ்ட்ரிக்ட் நயினாவா வாழ்ந்து வாரார்.

அதே சமயம் வாழ்க்கையில் எதுவும் சாதிக்க மாட்டான் என்று நினைக்கும் சமுத்திரகனியிடம் சாதித்து காட்ட நினைக்கும் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் காலேஜில் சேர்கிறார் .

அங்கு புரொபசரான எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்பட்டு சிவகார்த்திகேயனுக்கு டிகிரி கிடைக்க தடையா இருக்கார்.

அது மாதிரியான தடைகளை தாண்டி நாயகன் இன்ஜினியரிங் முடிச்சு கிடைச்ச வாய்ப்பை பய்ன்படுத்தி வாழ்க்கையில் எப்படி சாதிச்சார் என்பதே கதை

ஹீரோ சிவகார்த்திகேயன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். முன்னிலும் பெட்டரா டேன்ஸ், காமெடி, சென்டிமென்ட், லவ் என எல்லா பிளாட்ஃபார்மிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக நடனம் மற்றும் பள்ளி பருவ காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். தற்போது படிக்கும் மாணவர்களின் பிரதிபலிப்பாக அமர்களம் செஞ்சுக்கிட்டே இருந்தவர் கிளைமாக்ஸில் கண்களை குளமாக்குகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இருவரின் கெமிஸ்ட்ரி மற்ற்ய்ம் பிரேக் அப் கூடவே ரீ செட் எல்லாம் ஃப்ர்பக்டா ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா பல இடங்களில் கேஷூவலாக நடிச்சு அப்ளாஸ் வாங்கிக் கொண்டே இருக்கிறார். கண்டிப்பான அப்பாவாக அதிலும் பெண் குழந்தை ஏன் வேண்டுமென்ற ஆசையுடன் வரும் சமுத்திரகனி தொடங்கி ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் தங்கள் பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்காய்ங்க.

அனிருத் இசையில் பாடல்கள் வழக்கம் போல் ஹிட் ஆன நிலையில் பின்னணி இசை சிறப்பு. பாஸ்கரனின் ஒளிப்பதிவும் நிறைவு.

பள்ளி & கல்லூரி கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம், தொடங்கி இளம் இயக்குனர்களின் உணர்வை எல்லாம் கலந்து படையல் சாதம் வழங்கிய டைரக்டர் ஆசிரியர்கள் வர்க்கத்தை கொஞ்சம் அதிகப்படியாக அசிங்கப்படுத்தி இருப்பதுதான் நெருடலாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த ‘டான்’- படம் பார்க்க வருவோருக்கு ஃபீல் குட் ஃபீலிங்கை வழங்குகிறான்

மார்க் 3.5/5

aanthai

Recent Posts

லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது.…

4 hours ago

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 2024 வரை நீட்டிப்பு!

ஆதார் எண் இந்தியரின் ஒரு அடையாள எண்ணாக மாறிவிட்ட நிலையில், அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்ட…

4 hours ago

லாட்டரி திட்டம் மூலம் அரசுக்கு மிகத் துல்லியமான வரி வசூல்!

ஒரு நாட்டின் வரி வசூலை உடனடியாக 75% அதிகப்படுத்தவேண்டும். கண்டிஷன்கள்: அதிரடி ரெய்டுகள் கூடாது. வரிகளை அதிகப்படுத்தக்கூடாது. மக்கள் கழுத்தில்…

9 hours ago

நாடெங்கும் விற்பனைப் பொறுப்புகளில் பாலின இடைவெளி!

இந்தியாவில் விற்பனைத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர் என்றும், இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில்/ விற்பனைத்துறை உழைப்புச்…

9 hours ago

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள்!

ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. 'மிர்ச்சி' சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர்…

10 hours ago

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக…

1 day ago

This website uses cookies.