வெள்ளை மாளிகைக்குள் குடியேறப் போகும் ட்ரம்ப் குடும்ப உறுப்பினர்கள் பட்டியல்!

வெள்ளை மாளிகைக்குள் குடியேறப் போகும் ட்ரம்ப் குடும்ப உறுப்பினர்கள் பட்டியல்!

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வானதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றியபோது மேடையில் தனது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பிர்களை அருகில் வைத்துக்கொண்டார். அமெரிக்காவின் அடுத்த முதல் குடிமகனின் குடும்ப உறுப்பினர்கள் யார் யார்?

donald family nov 11 1

1.பாரன் ட்ரம்ப்:

டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய மனைவி மெலானியாவின் ஒரே மகன். வயது 10. தேர்தல் பிரச்சாரத்தில் இவர் மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மேடையில் தோன்றியிருந்தாலும் ட்ரம்பின் பிரச்சார பயணங்களில் இவர் அதிகம் வெளியில் காண்பிக்கப்படவில்லை. அப்பாவோடு கோல்ப் விளையாடும் இவருக்கு தன் அம்மாவின் மொழியான ஸ்லோவெனிய மொழி சரளமாகத் தெரியும்.

2.மெலானியா ட்ரம்ப்:

டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய மனைவி. ஸ்லொவெனியாவைச் சேர்ந்த முன்னாள் மாடலான இவர், 2005 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பை திருமணம் செய்துகொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்ற பெண்களை பாலியல்ரீதியில் தாக்கியது குறித்து டொனால்ட் ட்ரம்ப் பெருமையடித்துக்கொள்ளும் காணொளி வெளியானபோது தன் கணவருக்கு ஆதரவாக நின்றார். 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடியரசுக்கட்சி மாநாட்டில் இவர் பேசிய பேச்சு 2008 ஆம் ஆண்டு மிஷெல் ஒபாமா பேசிய பேச்சின் பிரதியாக்கம் என்கிற சர்ச்சையில் சிக்கினார். தனது கணவரின் நடத்தையில் எதை மாற்ற விரும்புவீர்கள் என்கிற கேள்விக்கு அவரது டுவிட்டர் பழக்கத்தை என்று பதிலளித்தார் இவர்.

3.ஜெராட் குஷ்னர்:

டொனால்ட் ட்ரம்பின் மருமகன். ட்ரம்பின் மூத்த மகள் இவாங்காவின் கணவர். நியூயார்க் நகரின் முன்னணி வீடுகட்டுமானத்தொழிலதிபரின் மகன். 10 ஆண்டுகளாக அப்சர்வர் என்கிற வாரப்பத்திரிக்கையின் உரிமையாளராக இருக்கிறார். ஹிலரி கிளிண்டனுக்கு எதிரான தனது டுவிட்டர் செய்தியில் டொனால்ட் ட்ரம்ப் யூதர்களை புண்படுத்தியதாக புகார் எழுந்தபோது யூதரான இவர் தன் மாமனாரை ஆதரித்து கருத்து தெரிவித்தது யூதர்களை கோபமடையச் செய்ததாக கூறப்படுகிறது.

4.இவாங்கா ட்ரம்ப்:

டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகள். அவர் பிள்ளைகளிலேயே மிகவும் பிரபலமானவர் இவர். ட்ரம்பின் முதல் மனைவி இவானாவுக்கும் இவருக்கும் பிறந்த ஒரே பெண் குழந்தை. முன்னாள் மாடலான இவர் தற்போது டொனால்ட் ட்ரம்ப் நிறுவனத்தில் துணைத்தலைவராக இருக்கிறார். டொனால்ட் ட்ரம்பின் ரியாலிடி டிவி ஷோவான தி அப்ரண்டீஸில் நீதிபதியாக வருகிறார். 2009 ஆம் ஆண்டு ஜெராடை திருமணம் செய்துகொண்டபோது யூதமதத்துக்கு மாறினார். பெண்ணுரிமைகள் காக்கப்படுவதற்கு பெண்கள் அனைவரும் தன் தந்தைக்கு வாக்களிக்க வேண்டும் என்று இவர் குடியரசுக்கட்சி மாநாட்டில் உரையாற்றினார்.

5.டிஃபானி ட்ரம்ப்:

டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது மகள். அவரது இரண்டாவது மனைவி மர்லா மேப்ள்ஸுக்கும் இவருக்கும் பிறந்தவர். முன்னாள் நடிகை, தொலைக்காட்சி பிரபலம். சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் தகவல்கள் அவரது கவர்ச்சியான ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் அதிகம் தென்படவில்லை. தனது தந்தை இயல்பிலேயே உற்சாகமூட்டுபவர் என்று குடியரசுக்கட்சி மாநாட்டில் இவர் ஆற்றிய உரை சிறப்பாக இருந்ததாக டொனால்ட் ட்ரம்பால் பாராட்டப்பட்டவர்.

_92397117_trump_annotated_976_ws_langs_numberscopy

6.வனெசா ட்ரம்ப் (ஹைடன்):

டொனால்ட் ட்ரம்பின் மருமகள். அவரது மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் மனைவி. ஐந்து குழந்தைகளின் தாய். சிறுமியாக மாடலிங்க் செய்ய ஆரம்பித்தவர். ஒரு காலத்தில் இவரும் லியனார்டோ டிகாப்ரியோவும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். தனது மைத்துனர் எரிக்கின் தொண்டு நிறுவனத்தில் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறார். தன் வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். சைலன்சர் கோ என்கிற துப்பாக்கி சைலன்ஸர்களை தயாரிக்கும் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியின்படி, ரகசிய துப்பாக்கியை வைத்துக்கொள்வதற்கான அனுமதி பெற்றவர் என்றும் துப்பாக்கிகளை தொடர்ந்து பயன்படுத்துபவர் என்றும் கூறப்படுகிறது.

7.காய் ட்ரம்ப்:

டொனால்ட் ட்ரம்பின் பேரப்பிள்ளைகளில் மூத்தவர். டொனால்ட் ஜூனியருக்கும் வனெசா ட்ரம்புக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் மூத்த மகன். வயது எட்டு.

8.டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர்:

டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன். டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானாவுக்கும் பிறந்தவர். தி ட்ரம்ப் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவர். ஃபேஷன் ஷோவில் தன் தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்ட வெனெஸாவை திருமணம் செய்துகொண்டார். இவரது பிரபலத்தில் சர்ச்சைகளும் அடக்கம். இவரும் இவரது தம்பி எரிக்கும் வேட்டை யாடுவதில் அதிக விருப்பமுள்ளவர்கள். இவர்கள் இருவரும் வேட்டையாடப்பட்ட முதலை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட விலங்குகளின் உடல்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது. வெட்டப்பட்ட யானையின் வாலுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

9.எரிக் ட்ரம்ப்:

டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மூலம் பிறந்த மூன்றாவது பிள்ளை. ட்ரம்பின் மற்ற வாரிசுகளைப் போலவே இவரும் ட்ரம்ப் நிறுவனத்தின் துணைத்தலைவர். விர்ஜினியாவில் இருக்கும் ட்ரம்பின் திராட்சைத் தோட்டங்களின் தலைவர். வெளிநாடுகளில் உள்ள ட்ரம்ப் கோல்ப் கிளப்களின் மேற்பார்வையாளர். 2006 ஆம் ஆண்டு அவர் எரிக் ட்ரம்ப் ஃபவுண்டேஷனை துவங்கினார். அதன் மூலம் குழந்தைகளுக்கு உயிராபத்தை உருவாக்கும் நோய்கள் தொடர்பான ஆய்வுக்கு 28 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அறிவித்தார். இவரது சகோதரரைப்போலவே 2010 ஆம் ஆண்டு இவர் சிம்பாம்வேவுக்கு வேட்டையாட பயணம் மேற்கொண்டு சர்ச்சையில் சிக்கினார். அமெரிக்க அதிபர் தேர்தலன்று தனது வாக்குச்சீட்டை படமெடுத்து “எனது தந்தைக்கு வாக்களிப்பது மிகப்பெரிய கவுரவம்” என்னும் வரிகளோடு தனது டுவிட்டரில் வெளியிட்ட இவரது செயல் சட்டமீறல் என்று கருதப்படுகிறது.

10.லாரா யுனஸ்கா:

டொனால்ட் ட்ரம்பின் மருமகள். எரிக் ட்ரம்பின் மனைவி. முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான இவர் 2014 ஆம் ஆண்டு எரிக்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன் குதிரையேற்றத்தில் இரண்டு கை மணிக்கட்டுக்களையும் உடைத்துக்கொண்டார். எரிக்குக்கும் இவருக்கும் குழந்தைகள் இல்லை. ஆனால் செல்ல நாய் ஒன்றை வளர்க்கிறார்கள். விலங்கு நல ஆர்வலரான இவர் தனது கணவர் தீவிரமாக வேட்டையாடுவது குறித்து என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை. அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ட்ரம்ப் ஃபவுண்டேஷனோடு இணைந்து பணிபுரிகிறார். “ஹிலரி பெண் என்பதாலேயே பெண்கள் அனைவரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனமானது, அவமானகரமானது, பெண்களை கேவலப்படுத்துவது” என்று இவர் நவம்பர் ஆறாம் தேதி ஃபாக்ஸ் செய்தியில்

தகவல் ;பிபிசி தமிழ்

error: Content is protected !!