October 20, 2021

தரம் தாழ்ந்து போன அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம்! – VEDIO

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்ப்பும் மக்களிடையே இரண்டாவது முறையாக நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று விவாதித்தனர். செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற இந்த 90 நிமிட விவாத நிகழ்ச்சியின்போது இருவரும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் நடைபெற்ற மிக மோசமான விவாதமாக இது கூறப்படுகிறது. முடிவெடுக்காத வாக்காளர்கள் மத்தியில் நடைபெற்ற விவாதத்தில், பெண்கள் குறித்த மோசமான கருத்துக்களைக் கூறிய ட்ரம்ப் அதிபராவதற்கு தகுதியற்றவர் என ஹிலரி கூறினார். பதிலடியாக ஹிலரியை பிசாசு என்ற ட்ரம்ப், தான் வென்றால் அவரை சிறைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார். மேலும் வழக்கமாக விவாதம் தொடங்கும்முன் கைகுலுக்கிக்கொள்ளும் அதிபர் வேட்பாளர்கள் இம்முறை கைகுலுக்கிக்கொள்ளவில்லை.

usa oct 10

ஒட்டு மொத்தத்தில் விவாதத்தின் போது கொள்கைகள் தொடர்பான அம்சங்களைவிட ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டுவதிலேயே பெரும்பகுதி நேரம் கழிந்தது. சிரியா விவகாரம், லிபியாவில் நடந்த யுத்தம், அகதிகள் பிரச்னை போன்றவை குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேட்பாளர்களுக்கு 2 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியவர், வரிகட்டாமல் ஏமாற்றியவர் என டொனால்ட் மீது ஹிலாரி கிளிண்டன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். அதற்கு பதில் அளித்த டிரம்ப், அது, நடந்து முடிந்த பழைய கதை. நான் வெள்ளை மாளிகையில் அதிபராகும் வாய்ப்பைப்பெற்றால், ஹிலாரி கிளிண்டனைச் சிறையில் அடைப்பேன். அரசு அலுவல்களுக்காக தனிப்பட்ட இமெயில் சர்வரை பயன்படுத்தி, அதன்வழியாக நாட்டின் முக்கிய ரகசியங்கள் கொண்ட சுமார் 30 ஆயிரம் முக்கிய கடிதங்களை கசியவிட்டு, நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி ஹிலாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதை விசாரிக்கத் தனிப்பட்ட வழக்குரைஞரையும் நியமிப்பேன் என்றார் டிரம்ப். தேசிய பாதுகாப்புக்குத் ஹிலாரி பங்கம் விளைவித்துவிட்டதாக அவர் சாடினார். தமது செயல்களுக்காக ஹிலாரி வெட்கப்படவேண்டும் என்றார் டிரம்ப்.

இதற்கு பதில் அளித்த ஹிலாரி, இவ்வளவு ஆவேசம் கொண்ட நபரை இந்த நாட்டின் சட்டத்தை பாதுகாப்பவராக வெள்ளை மாளிகைக்கு நீங்கள் (வாக்காளர்கள்) அனுப்பாமல் இருப்பது நல்லது என்றார்.

இதற்கு நெற்றியடியாக தனது கருத்தை பதிவு செய்த டிரம்ப், (நான் வெள்ளை மாளிகையில் சட்டத்தை பாதுகாக்கும் அதிபர் பொறுப்புக்கு வந்து விட்டால்) ஏனென்றால், நீங்கள் சிறைக்கு போக வேண்டியதாகிவிடும் என்று கூறினார்.

வரும் 19-ஆம் தேதியும் டிரம்ப் – ஹிலாரி ஆகியோருக்கு இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வீடியோ’

https://www.youtube.com/watch?v=f6-2f31E_SY