September 25, 2021

அமெரிக்க பாதுக்காப்புக்கே ஆப்பு வைக்குது கோர்ட் – அதிபர் டர்ம்ப் டென்ஷன்

ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடையை, தற்காலிக தடை செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது நாட்டை நீதித்துறை ஆபத்தில் சிக்க வைத்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை.அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஏதெனும் நேர்ந்தால் அதற்கு நீதித்துறையே பொறுப்பு. நீதித்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அமெரிக்கா வருபவர்களை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மிகக் கவனமாக பரிசோதிக்க வேண்டும். நீதிமன்றம் நமது பணியை மேலும் கடினமாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

usa feb 6

முன்னதாக ட்ரம்ப்பின் உத்தரவுப்படி, சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது. மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, பலர் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்த நடவடிக்கை நாட்டை பாதுகாக்கும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக வாஷிங்டன் மாகாணம் தொடுத்த வழக்கை விசாரித்த, அமெரிக்காவின் சீட்டல் மாகாண நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் ட்ரம்ப்பின் ஆணைக்கு தற்காலிக தடை உத்தரவை பிறப்பத்தார்.

தடை உத்தரவு குறித்து ஜேம்ஸ் ராபர்ட் கூறும்போது, ‘செம்டம்பர் 11’ தாக்குதல் போன்றவை நீங்கள் தடை விதித்துள்ள ஏழு நாடுகளின் தனி நபர்களால் நிகழ்த்தப்பட்டதா? ட்ரம்பின் ஆணை உண்மைக்கு எதிராக உள்ளது” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், “இது பெயரளவிலான நீதிபதி ஒருவரின் கருத்து” என்று கூறினார்.இந்த விவகாரம் தொடர்பாக துணை அதிபர் மைக் பென்ஸ் ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு கூறும்போது, “தவறான முடிவை நீதிபதி கூறியுள்ளார். சட்ட பூர்வமான முறையில் ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தின் இந்தத் தடையை எதிர் கொண்டு நாட்டை பாதுகாக்கும்” என்று கூறினார்.