இந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா? தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….!

இந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா? தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி அவர்கள், இந்தி படிச்சவங்க இங்க வந்து பானிபூரிதான் விற்கறாங்க எனச்சொல்லி இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசுக்கும், இந்திக்காக வக்காலத்து வாங்கும் கவர்னர் ரவிக்கும் பதிலடி தந்துள்ளார். நிகழ்ச்சி மேடையிலேயே பதிலடி தந்ததை வரவேற்போம், அதேநேரத்தில் அவன் இங்கு வந்து பானிபூரி விற்கிறான் என்பது உண்மைதான். அப்படி சொல்லியே நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

தமிழக களநிலவரம் வேறு.

வடமாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழகம் வந்து வேலை செய்தவர்கள் இன்று நம்மக்களுக்கு வேலை தரும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்கள் என்பதே களநிலவரம். அதற்கு காரணம் நம்மை சுற்றியுள்ள வர்த்தகர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் என பலருக்கும் தொடர்பு உண்டு.

நம்மாளு சரியா வேலைக்கு வர்றமாட்டேன்கிறான், கூலி அதிகமாக கேட்கறான், லா பேசறான் அதெல்லாம் பேசாமல் சொல்ற வேலையை செய்துட்டு போறான், மாடு மாதிரி உழைக்கறான் எனச்சொல்லி வடஇந்தியர்களை ஆதரித்ததன் விளைவு இன்று சேலத்தில் தெருவில் இட்லி சுட்டு விற்கும் அளவுக்கு இறங்கிவிட்டார்கள் வடமாநிலத்தவர்கள். நாமயென்னவோ அவன் இங்குவந்து பானிபூரி வித்துக்கிட்டு இருக்கான் என பேசிக்கொண்டு இருக்கிறோம்.

முகநூலில் உள்ள தோழர்கள் உங்கள் நகரத்தை சுற்றி வாருங்கள் அல்லது உங்கள் ஊர் வர்த்தகர்களிடம் பேசிப்பாருங்கள். கடந்த பத்தாண்டுகளில் வடமாநிலத்தவர்கள் எவ்வளவு பேர் அந்த நகரத்தில் தொழில் தொடங்கியுள்ளார்கள் எனக்கேளுங்கள் விபரீதம் புரியும். அவன் உழைக்கிறான், சம்பாதிக்கறான், தொழில் தொடங்குகிறான் என இதை கடந்துவிட முடியாது. குறைவான கூலி வாங்கும் ஒருவனால் நகரத்தின் மையத்தில் எப்படி சுலபமாக ஒருஇடத்தை மார்க்கெட் வேல்யூவை விட இரண்டு மடங்கு பணம் லட்சங்களில் அட்வான்ஸ் தந்து பிடிக்க முடிகிறது? தொழில் தொடங்க முடிகிறது?.

வேலூரை எடுத்துக்கொள்வோம். 10 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளார்கள் என்றால் அதில் 4 ஆயிரம் வர்த்தகர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான நிதி தேவை எவ்வளவு கோடிகளில் கேட்டாலும் சுலபமாக கிடைக்கிறது. வடஇந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து தொழில் தொடங்குபவர்களுக்கு நிதிதருவதற்கான சங்கம், அமைப்புகள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளன. மிகமிக குறைந்த வட்டி அதாவது அரை பைசாவுக்கும் கீழே எந்தவித ஆவண உத்தரவாதமும் இல்லாமல் கிடைக்கிறது.

நீங்களோ, நானோ ஒரு வியாபாரத்தை தொடங்குகிறோம் என்றால் அப்படி நிதியுதவி தர எந்த அமைப்பாவுது உள்ளதா? நம்ம சாதிக்காரன் எனச்சொல்லுபவர்கள் தங்கள் சாதிக்காரனுக்கு தருகிறார்களா? என்றால் 200 சதவிதம் இல்லை. தமிழ்நாட்டில் மொத்த வியாபாரம் என்பது இஸ்லாமியர்களிடம்மிருந்து வடமாநிலத்தவர்களின் கைகளுக்கு வந்துவிட்டது. அவர்களிடம்மிருந்தே தமிழக சிறுகுறு வர்த்தகர்கள் பொருட்கள் வாங்கி வியாபாரம் செய்கிறார்கள். சிறுகுறு வியாபாரத்தில் இருந்தும் தமிழக வியாபாரிகளை ஒழிக்க அவர்கள் ஒரு விஷயத்தை கையாள்கின்றனர்.

அதாவது மொத்த வியாபாரிகளான வடஇந்திய வர்த்தகர்கள், ஒருபொருளை தமிழக வர்த்தகராக இருந்தால் 70 ரூபாய்க்கும், தன்மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் அதேபொருளை 50 ரூபாய்க்கும் தருகிறார்கள். அந்த பொருளை விற்பதன் மூலமாக தமிழக வியாபாரிக்கு 30 ரூபாய் லாபம் கிடைத்தால், வடமாநில வியாபாரிக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கிறது. பலநேரங்களில் 10 ரூபாய் குறைத்து 90 ரூபாய்க்கும் விற்கிறான் வடமாநில வியாபாரி. நாம் என்ன செய்வோம் பொருளை விலை விசாரித்து 90 ரூபாய் விற்கும் இடத்திலேயே வாங்குவோம்.

இந்த வடமாநில வர்த்தகர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பே பாஜகவும், பல பெயர்களில் புகுந்துள்ள இந்துத்துவா அமைப்புகள்தான். வர்த்தகத்தில் உள்ள இஸ்லாமியர்களை விரட்ட கைகோர்ப்போம், உங்கள் ஆட்களால் முடியாது, இவனும் இந்துதான் எனச்சொல்லி வடஇந்திய வர்த்தகர்களுக்கு தொழில் தொடங்க பக்கபலமாக இருங்கள், கட்சி நடத்த நிதிதருவார்கள் அதைவைத்து செலவு செய்யுங்கள் எனச்சொல்லி மூளையற்ற தமிழக சங்கிகளுக்கு கட்சியில் பதவி தந்து வடஇந்திய வர்த்தகர்களுக்கு அடியாள் வேலை செய்யவைக்கின்றன. அவன் இஸ்லாமியர்கள் நடத்தும் வியாபாரத்தை மட்டும் காலி செய்யவில்லை. இந்துக்கள் எனச்சொல்லப்படுபவர்களின் வியாபாரத்தையும் சேர்த்துதான் காலி செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியன் மொத்த வியாபாரியாக இருந்தால் நம்மவூர் செட்டியார், முதலியார், நாயுடு சாதியினர் அதிகளவில் சிறுகுறு வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். பஜாரில் வியாபாரம் செய்யும் முதலியாருக்கு செட்டியார் வளர்ந்துவிடக்கூடாது, செட்டியாருக்கு நாயுடு வளர்ந்துவிடக்கூடாது, நாயுடுகளுக்கு வன்னியர்கள் வளர்ந்துவிடக்கூடாது, வன்னியர்களுக்கு தலித் வளர்ந்துவிடக்கூடாது, தலித்களுக்கு அருந்ததியர் வளர்ந்துவிடக்கூடாது என குழி வெட்டுவதால் வடஇந்திய வர்த்தகர்களோடு போட்டிப்போட முடியாமல் இவர்களின் வர்த்தகம் நக்கிக்கொண்டு போகிறது.

நம்மாளுங்க நான் ஃபில் போட்டு சரியா வியாபாரம் செய்யறன், ஜீ.எஸ்.டி சரியா கட்டறன் என நம்மிடம் பணத்தை பிடுங்குவார்கள். மார்வாடிகள் நம்மிடம் நூறு ரூபாய் முதல் கோடிகளில் வியாபாரம் செய்தாலும் ஃபில் வேண்டாம் என்றால் பில் போடமாட்டார்கள். நகை கடைகளில் மட்டும்மல்ல பிளாஸ்டிக் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் வடஇந்தியர்கள் ஃபில் போடுவதேயில்லை. வருமானவரித்துறையோ, வணிக வரித்துறை எதுவும் இவர்களை கண்டுக்கொள்வதில்லை. சில நேரங்களில் சிக்கினாலும் இவர்களை காப்பாற்ற வணிகவரித்துறை, வருமானவரித்துறையில் வடஇந்திய அதிகாரி அமர்ந்துக்கொண்டு எல்லா உதவிகளையும் செய்து காப்பாற்கிறார்.

அதே அலுவலகத்தில் நம்மாட்கள் யாராவது இருந்து போய் நம்மாட்கள் உதவியெனக்கேட்டால், நீங்க நம்மாளா (சாதி) என்பதே அவர்களின் முதல் கேள்வி. அடுத்ததாக என் வேலை போய்டுங்க என பம்முகிறார்கள். வடஇந்திய அதிகாரிகள் அதுப்பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. கோவையில் பாஜக வானதி சீனுவாசன் வெற்றி பெறக் காரணம் என்னவென பூத்வாரியாக வாக்கு சதவிதத்தை எடுத்துப்பாருங்கள், எந்தளவுக்கு வடமாநில மக்கள் இங்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் கார்டு வாங்கியுள்ளார்கள் என்பது தெரியும். இதுயெல்லாம் வாங்க நீங்களோ, நானோ தாலுக்கா அலுவலத்துக்கும் வீட்டுக்கும் அலையவேண்டியுள்ளது. அவர்களுக்கு அது சுலபமாக கிடைக்கிறது. அரசாங்கம் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறதா என்றால் இல்லை. பணம் தந்தால் பல்லைக்காட்டும் அரசு ஊழியர்கள் நிறைந்துயிருப்பதால் இதுசாத்தியமாகிறது.

தமிழர்களின் வியாபாரத்தை காலி செய்யும் வடஇந்தியர்கள் அரசியலுக்குள் தங்களுக்கு வேண்டியவரை வெற்றி பெற வைக்கும் அளவுக்கு சிறிய சிறிய ஊர்களிலும் வளர துவங்கியுள்ளார்கள் என்பதே நிதர்சனம். இந்தி படிச்சிட்டு வந்து நம்மவூர்ல பானிபூரி விக்கறான், கூர்க்கா வேலை செய்யறான், ஹோட்டல்ல சப்பாத்தி சுடுகிறான் என ஏமாற்றிக்கொள்வதை விட்டுவிட்டு இதிலிருந்து மீள்வது எப்படியென யோசியுங்கள். இல்லையேல் அவன் பானிபூரி பேக்டரியில் நீங்கள் மாவு பிசையும் வேலையை செய்ய வேண்டியதாகிவிடும்.

ராஜ ராஜப்ரியன்

error: Content is protected !!