பார்சல் உறைகளை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ உபயோக்கக் கூடாது!

பார்சல் உறைகளை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ உபயோக்கக் கூடாது!

றைச்சி, மளிகை மற்றும் உணவுப்பொருட்களை போடுவதற்காக பை உறைகளை எச்சில் தொட்டு எடுக்கவோ, வாயால் ஊதவோ கூடாது என்று வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ;

“மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.பொது ஊரடங்கின்போது சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது. உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில் அந்த கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். எனவே, என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

சமீபத்தில் இது தொடர்பான பொது நல வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. இது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்று ஜெ.ராதாகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!