July 28, 2021

நாட்டு மக்களுக்கு நம்ம வருமான வரித்துறை எச்சரிக்கை!

அரசியல் கட்சிகளுக்கு 2000 ரூபாய்க்கு அதிகமாக ரொக்கமாக நன்கொடை கொடுக்க கூடாது. மேலும் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடக் கூடாது என்று வருமான வரித்துறை  மக்களை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் நாட்டின் முக்கிய செய்திதாள்களில் விளம்பரமாக நேற்று வெளியாகியுள்ளன.

தேர்தல் செலவுகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க பாரத ஸ்டேட் வங்கிகளில் இருந்து தேர்தல் பத்திரங்கள் வாங்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு இந்த மாதம் அறிவித்தது. அந்த திட்டத்தின் படி அரசியல் கட்சிகளுக்கு யாரும் 2000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்கக்கூடாது. இந்த தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த பத்திரங்கள் 15 நாட்களுக்கு மட்டுமே செல்லும். பத்திரத்தில் பணம் கொடுப்பவரின் பெயர் குறிப்பிடப்படாது.ஆனால் பத்திரம் வாங்கும் போது வங்கியில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் முழு விவரங்களும் அளிக்க வேண்டும்.

இந்த தகவலை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று நாட்டின் முக்கிய செய்திதாள்களில் வருமான வரித்துறை பொது விளம்பரம் வெளியிட்டுள்ளது. அரசியல் நன்கொடை தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) வெளியிட்ட முதல் பொது விளம்பரம் இதுவாகும்.

மேலும் பொதுமக்களுக்கான சில விதிமுறைகளையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் இதோ :

தனி நபரிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக மக்கள் பெறக்கூடாது. எதேனும் நிகழ்ச்சி அல்லது விழாவை முன்னிட்டு ஒரு தடவைக்கு மேல் பண பரிமாற்றம் செய்யக்கூடாது.

அசையா சொத்துக்களை கைமாற்ற 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்க பணத்தை கொடுக்கவோ வாங்கவோ கூடாது. மேலும் வணிகம் அல்லது தொழில் தொடர்பாக 10,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் கொடுக்க கூடாது.

மேற்கண்ட விஷயங்களில் ரொக்க பணபரிமாற்றத்தை தவிர்க்கும்படி மக்களுக்கு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது. மேற்கண்ட விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மக்களை எச்சரித்துள்ளது.

மேலும் கருப்பு பணம் பதுக்குவோர், சட்டவிரோதமாக பினாமி சொத்துக்கள் வாங்குவோர் ஆகியோர் குறித்து மக்கள் வருமான வரித்துறைக்கு கீழ்கண்ட இணைய முகவரிக்கு மெயில் அனுப்பலாம். அல்லது மாவட்ட வருமான துறை ஆணையருக்கு தகவல் அனுப்பலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

mailto:blackmoneyinfo@incometax.gov.in”

nblackmoneyinfo@incometax.gov.­in