முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!-முதல்வராக பதவி ஏற்பு – வீடியோ

மிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா இன்று எளிமையாக நடைபெற்றது. இன்று காலை 8:45 மணிக்கு முதலமைச்சராக பதவி ஏற்க ஆளுநர் மாளிகைக்கு வந்த மு.க.ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அமைச்சராக பதவியேற்க உள்ளவர்களை ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நாட்டுப் பண் இசையுடன் துவங்கியது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்தார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று உறுதிமொழியை கூறி முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று கொண்டார்.

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, அதிமுக ஒருங்கிணப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ், மநீம தலைவர் கமல்ஹாசன், மற்றும் பாமக உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர்,மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா தொடங்கியது – துரை முருகன் உள்ளிட்ட 33 அமைச்சர்கள் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.