தமிழக கவர்னர் ரவியை திரும்பப் பெறக்கோரி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் – திமுக அதிரடி.

தமிழக கவர்னர் ரவியை திரும்பப் பெறக்கோரி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் – திமுக அதிரடி.

மிழக கவர்னர்ர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்தது.மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி.டி.ஆர். பாலு தாக்கல் செய்தார்.

தமிழக மாணவர்களை காவு வாங்கி வரும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு. ஆனால், இந்த மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார் கவர்னர்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்காமல் 142 நாட்களுக்கு பிறகு தமிழக அரசுக்கு மீண்டும் அனுப்பினார். கவர்னரின் இந்த செயல் தமிழக அரசு மட்டுமின்றி மாணவர்களையும் வேதனையடைவை வைத்தது.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவையும் கவர்னர் தற்போது வரை கிடப்பில் வைத்துள்ளார். முதல்வரும் கவர்னரைச் சந்தித்து நேரில் வலியுறுத்தினார். இதுவரை கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்துள்ளது. மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி.டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக நேற்று ஏப்ரல் 4ல்  கவர்னர் ஆர்.என்.ரவி தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து. முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆர்.என்.ரவிக்கு ”தமிழ்நாடு ஆளுநர்  திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும்; உடல்நலனும்; மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ இந்நாளில் அவரை வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்து சேதி அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!