விரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன்! – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ!
சென்னை அம்பத்தூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் கலந்து கொண்டனர்,அப்போது ‘‘மக்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு மொத்தம் 5 கடவுள்கள் உண்டு. எனக்காக பிரார்த்தனை செய்த தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன். மக்களுக்கு சேவை ஆற்றுவேன். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று விஜயகாந்த் பேசினார்.
சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பொங்கல் விழாவுக்காக தே.மு.தி.க சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. விஜயகாந்த்தைக் காண்பதற்காக காலையில் இருந்தே பொதுமக்களும் தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் 10 மணியளவில் அங்கு வருகை புரிந்தனர். விஜயகாந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது,.
இளைஞர் தின வாழ்த்துகளுடன் தன் பேச்சை தொடங்கினார் பிரேமலதா, “பொங்கல் வந்தால்தான் திருவிழா என்றில்லை. கேப்டன் வந்தாலே திருவிழாதான் எனப் பிரேமலதா பேச்சை தொடங்க தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். அனைத்து மதமும் ஒன்றுதான் என்பது கேப்டனின் கொள்கை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுகின்றன. இந்தியா என்பது இந்துக்களின் நாடுதான் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இஸ்லாமியர் களும் கிறிஸ்துவர்களும் நம்முடன் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வந்த பூமி இது. 2020-ல் நம்முடைய ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதற்கு அடித்தளமாக உள்ளாட்சி தேர்தலில் நாம் நல்ல வெற்றிபெற்றுள்ளோம். 2021-ல் மிகப்பெரிய வெற்றியை அடைவோம். தே.மு.தி.க மீண்டும் விஸ்வரூப வெற்றி பெறும்” எனச் சூளுரைத்தார்.
இதையடுத்து பேசிய விஜயகாந்த், “என் மக்களுக்காக சேவையாற்ற மீண்டும் வருவேன். எனக்கு ஐந்து தெய்வங்கள் உள்ளது. எனக்காக பிரார்த்தனை மேற்கொள்ளும் தொண்டர்கள்தான் என் முதல் கடவுள். விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வருவேன்” என உருக்கமாகத் தெரிவித்தார்.