September 25, 2021

“நாடோடிகள் – 2 ” படத்துக்கும் நாடோடிகள் படத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை!- சமுத்திரக்கனி

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .  இதன் பின்னர் இந்த ஜோடி சேர்ந்து இயங்கவில்லை. சமுத்திரக்கனி தனி இயக்குநராகவும், நடிகராகவும் பிரகாசித்து தேசிய விருதுவரையிலும் போய்விட்டார். சசிகுமாரும் இது வரையிலும் 16 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். இதனிடையே  அந்த நாடோடிகள் வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.  

இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ  நாராயணன்,  ஞான சம்பந்தம்,  துளசி,  ஸ்ரீரஞ்சனி,  சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

இந்த ‘நாடோடிகள் 2’ களம் பற்றி சமுத்திரக்கனியிடம் கேட்ட போது, “”சாதி மேல எனக்குப் பெரும் கோபம் உண்டு. சாதியப் பிரச்னைகள் வரும்போதெல்லாம், ஆத்திரம்தான் வரும். அதேசமயம், சாதியே வேண்டாம்னு சொல்ற பசங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அப்படிப் பட்ட இளைஞர் களைப் பற்றிய படம் இது. ‘நாடோடிகள்’ படத்துக்கும், இந்தப் படத்துக்கும் சம்பந்தம் கிடையாது. இது முற்றிலும் வேற கதை. ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் சாதியை வெறுக்கிற இளைஞர்கள் இருக்காங்க… அதை மையமா வைத்து கதை போகுது. இந்தப் படத்திற்கு முதல்ல ‘ரத்தம்’னுதான் வெச்சேன். ஹீரோவா சசிகுமார் கமிட் ஆனபிறகு, அந்த டைட்டில் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, ஏற்கெனவே தம்பி சசியை ரத்த வாடை அதிகமான படத்துல நடிக்கிறதா சொல்லிக்கிட்டிருக்காங்க. நீங்க ‘நாடோடிகள் 2’ன்னே டைட்டில் வெச்சிடுங்க’ன்னு சசிதான் சொன்னான்.” என்றார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு – ஏகாம்பரம்

கலை – ஜாக்கி

எடிட்டிங் –  ரமேஷ்

பாடலாசிரியர் – யுகபாரதி

சண்டை பயிற்சி –  திலீப் சுப்புராயன்

நடனம் – திணேஷ், ஜான் 

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.

தயாரிப்பு  –  எஸ்.நந்தகோபால்

எழுதி இயக்குகிறார்  – சமுத்திரகனி.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

 

3 Attachments