January 18, 2022

அருண் வைத்தியநாதன் இயக்கிய ‘நிபுணன்’ – திரை விமர்சனம்!

ஆக்ஷ்ன் கிங் அர்ஜுனின் 150வது படமான “நிபுணன்” வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 28ம் தேதி அன்று ரிலீஸ். நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல் என்று பில்ட் அப் கொடுக்கப்படும்‘நிபுணன்’படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா மற்றும் சுருதி ஹரிஹரன் போன்றோர் நடித்துள்ளார். இந்த ‘நிபுணன்’ படத்திற்கு ஆரம்பத்தில் தியேட்டர்களே கிடைக்காமல் இருந்த நிலையில் ‘வி.ஐ.பி-2’ ரிலீஸ் கேன்சலானதால் எதிர்பார்த்ததை விட எக்கச்சக்க மான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளனவாம். அதிலும் போன ஜூலை-7ஆம் தேதியே ரிலீஸாக தயாரான இந்த ‘நிபுணன்’ ஜி எஸ் டி பிரச்னை + தியேட்டர் ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிப் போனாலும் கூட, இப்போது நிறைய தியேட்டர்களுடன் நல்லதொரு சூழலில்தான் வெளியாகிறது என்னும் போது வெளியான படம் எப்படி?

அது பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் நிபுணன் இயக்குநர் மற்றும் அருண் அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் இப்படம் பற்றி சொன்னதை நினைவுப்படுத்தி கொள்ளலாமே!

“இந்த கதைக்காக நிறையப் பேரைச் சந்தித்துப் பேசினேன். துப்பறியும் நிபுணர்கள் தொடர்பான புத்தகங்களைப் படித்தேன்; படங்கள் பார்த்தேன். இங்குள்ள துப்பறியும் நிபுணர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பெங்களூருவில் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். மேலும் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு படித்தது, பார்த்தது எல்லாவற்றையும் சேர்த்து எழுதும்போது ஒரு முழுமையான கதை கிடைத்தது” என்று சொல்லி இருந்தார்.

இப்படி சொன்ன அருண் வைத்ய நாதன் முன்னதாக ஐ. டி வேலைக்காக அமெரிக்கா போன் இடத்திலும் தன் தனிப்பட்ட ஆசை யான திரைப்படத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நியூயார்க்க்கிலுள்ள பிலிம் அகாடமியில் படித்தும் சின்ன சின்னக் குறும்படங்களை எடுத்தும் தன்னை வளர்த்து வந்தார். இத்தனைக்கும் அருண் இயக்கிய குறும் படங்கள் சர்வ்தேச அளவில் பல்வேறு அவார்டுகளை வென்றன. ஆனாலும் முழு நீளப் படம் ஒன்றை அதையும் தமிழில் எடுக்க ஆசைப்பட்டு. அவர் எழுதி இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படம் தனி கவனத்தை பெற்றது. இதையடுத்து மோகன்லாலை வைத்து கொடுத்த பெருச்சாளியை இன்றளவும் பலராலும் மறக்க முடியாது.

அப்பேர் பட்டவர் தற்போது நிபுணன் என்ற பெயரில் கொடுத்துள்ள கதை சுருக்கம் இம்புட்டுதான்: சிஐடி டிப்பார்ட்மெண்ட்டில் டி எஸ் பியான அர்ஜூன் டீமில் பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் இன்வெஸ்டிகெட்டிவ் ஆபீசர்களால இருக்கிறார்கள். இந்தக் குழுவிற்கு நேரடி சவால் விட்டு யாரோ ஒருவர் தொடர்ந்து கொலைகள் செய்கிறான். அதிலும் ஒரு அரசியல்வாதி, டாக்டர், அதற்கடுத்து ஒரு வக்கீல் என கொலை செய்யப்படும் நிலையில் அந்த சைக்கோ கொலைகாரனின் நெக்ஸ் டார்கெட் தான்தான் என்பதை அர்ஜூன் யூகித்து கொள்கிறார். பிறகென்ன? அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார்? அந்த சைக்கோ கில்லரின் நோக்கம் என்ன? கொலையாளியை எப்படி சமாளித்து என்பதுதான் படத்தின் படத்தின் கதை. ஹைடெக்கான த்ரில்லர் கதையை யோசித்த அமெரிக்கா வாசி அருண் வைத்தியநாதன் சி ஐ டி என்ற டிப்பார்ட்மெண்ட் என்று குறிப்பிட்டு தமிழ்வாணன் கதையை நினைவுப்படுத்தி திரைக்கதையில் கொஞ்சம் ஒட்டுதல் இல்லாமல் செய்து விட்டதாவது பரவாயில்லை.

திடீரென ஹீரோ அர்ஜூனுக்கு பார்கின்சன்ஸ் நோய் தாக்கி விட்டது என்று ட்விஸ்ட் வைத்து (எதற்காக அந்நோயை ஹீரோவுக்கு வரவழைத்தார் என்பதற்கு இயக்குநருக்கு தனிப்பட்ட காரணம் இருக்கிறதாம்) அந்நோயின் சீரியஸ்தனத்தையே கொச்சைப் படுத்தியதுதான் படு சொதப்பல். இவர் குறிப்பிடும் பார்கின்சன்ஸ் நோய் என்பது ஒரு கொடுமையான நோய். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடற்ற உடல்நடுக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள். அன்றாட அத்தியாவசிய வேலைகளான உணவு உண்ணுதல், உடை மாற்றுதல் ஆகியவற்றில் இவர்களுடைய நடுக்கத்தின் காரணமாக பெரும் சிரமம் ஏற்படும். சிம்பிளாக சொல்வதானால் டாய்லெட் போகும் போகும் போது துணைக்கு ஒருவரை வைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய நோயிது. அந்த நோயால் ஹீரோ பாதிக்கப்பட்டதாக சொல்லும் இயக்குநர் தொடர்ந்து அவர் தனியாக கார் ட்ரைவ் செய்வது, ஃபைட் செய்வது என்பது மாதிரியான ஆக்‌ஷன் போர்ஷன்களைக் காட்டி லட்சக்கணக்கான பார்கின்சன்ஸ் நோயாளிகளை திசை திருப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் கதைக்கு ட்விஸ்டாக நம் நாட்டில் பரபரப்பாக நடந்த வழக்கான ஆருஷி கொலை வழக்கை எடுத்த இயக்குநர் அது குறித்த விசாரணையின் முக்கிய பேச்சு விவரத்தை ரிக்கார்ட்டர்ட் அறையில் நடப்பது போல் காண்பித்து ஒட்டு மொத்த டிப்பார்ட்மெண்ட் மானத்தை வாங்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படு ஆக்டிவான அர்ஜூன் ஸ்டண்ட் காட்சிகளை விட வீட்டில் மனைவி சுருதி ஹரிஹரன் (ஷில்பா)வுடன் ரொமான்ஸ் பண்ணும் போது ரொம்ப பிரமாதப்படுத்துகிறார். அதிலும் இந்த டி எஸ் பி – ரஞ்சித் காளிதாஸ் (அர்ஜூன்) வீட்டைப் பார்த்தால் நிஜ டி எஸ் பி.கள் பெருமூச்சு விட்டே இளைத்து போவார்கள். அவ்வளவு பிரமாண்டம்.

அதே சமயம் கிரைம் த்ரில்லர் படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கும் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பர்பகெட்ட்டாக இருக்கிறது..ஆனாலும் நவீனின் பின்னணி இசை போன வாரன் வெளியான விக்ரம் வேதா பேக் ரவுன்ட் மியூசிக்கை ரிமைன்ண்டர் செய்வதை தவிர்க்க இஅயவில்லை, அரவிந்த்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கிளாசிக்.மொத்தத்தில் அர்ஜூனுக்கு அசிஸ்டெண்டாக வரும் பிரசன்னா சொல்லும் வசனம்தான் முத்தாய்ப்பாக நினைவுக்கு வருகிறது – ஜட்டிக்குள்ளே பாம் வச்சிட்டாய்ங்க!

மார்க் 5/ 2.25