ச்சே.. இந்த பி எம் டபியுள்யு கார் சுத்த வேஸ்ட்- எனக்கு வேண்டாம்! – தீபா கர்மாகர் அதிரடி!

ச்சே.. இந்த பி எம் டபியுள்யு கார் சுத்த வேஸ்ட்- எனக்கு வேண்டாம்! – தீபா கர்மாகர்  அதிரடி!

போன மாசம் ரியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் வென்ற வெள்ளி மங்கை சிந்து, மல்யுத்தத்தில் வென்று வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், ஜிம்னாசியத்தில் சாதனை படைத்த தீபா கர்மாகர் ஆகியோருக்கு விலை உயர்ந்த சொகுசு காரான பிஎம்டபிள்யு கார் பரிசளிக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த பரிசுகளை வழங்கினார். இதில் தீபா கர்மாகருக்கு ஐதராபாத் பேட்மின்டன் கழகத்தின் தலைவர் சாமுன்டேஸ்வரநாத்தின் சார்பில் தீபாவுக்கு காரை டெண்டுல்கர் வழங்கினார்.

deepa oct 12

இந்த சூழலில், திரிபுரா ஸ்டேட்டிலுள்ள அகர்தலாவில் தன்னோட குடும்பத்தினருடன் வசித்து வரும் தீபாவுக்கு, அந்த காரை பராமரிப்பதற்கு செலவு அதிகமாகும் என தோன்றியது. அகர்தலா போன்ற நகர்களில் இது போன்ற சொகுசு காரை வைத்து பராமரிப்பது இயலாத காரியம். அத்துடன் அகர்தலாவில் பிஎம்டபிள்யு காருக்கான சர்வீஸ் சென்டர் கிடையாது. இதையெல்லாம் விட முக்கியமா அங்கு இது மாதிரி பெரிய காரை ஓட்டிச் செல்ல போதிய சாலை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள தீபா தயாராக வேண்டியுள்ளது. எனவே இந்த சூழலில் காரை வைத்து தீபா குடும்பத்தினரால் பராமரிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த காரை அதன் முந்தைய உரிமையாளரான ஐதராபாத் பேட்மின்டன் கழகத்தின் தலைவர் சாமுன்டேஸ்வரநாத்திடமே ஒப்படைக்க தீபா முடிவு செய்துள்ளார்.

ஆனால் அதே நேரம் இது தீபாவின் முடிவு அல்ல என்றும், அவரது குடும்பத்தினர் முடிவு என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அவரது பயிற்சியாளர் பிஷ்வேஸ்வர் நந்தி கூறுகையில், ‘‘ஜெர்மனியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தீபா தயாராக வேண்டும் என்பதே முக்கியமான காரணமாகும். காருக்கு பதிலாக அதற்கு இணையான தொகையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை தீபாவின் வங்கி கணக்கில் செலுத்தினால் மகிழ்ச்சி அடைவோம் என்று குடும்பத்தினர் பேட்மின்டன் கழகத்திற்கு தெரிவித்துள்ளனர்’’ என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து அவருடைய தந்தை துலால் கர்மாகர் கூறும்போது, நாங்கள் காரைத் திருப்பித் தரவில்லை. அதற்குப் பதிலாக வேறு காரை வாங்க முடிவு செய்துள்ளோம். அகர்தாலாவில் பிஎம்டபிள்யூ சர்வீஸ் செண்டர் கிடையாது. அதை ஓட்டக்கூடிய ஓட்டுநரும் கிடைக்கவில்லை. மேலும் எங்கள் ஊரின் ஊரின் சாலைகளில் இந்தச் சொகுசு காரை ஓட்டுவது எளிதாக இல்லை. இதுகுறித்து ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத்திடம் பேசிவிட்டோம். காருக்கு இணையான தொகையை வழங்கிவிடுங்கள். வேறு கார் வாங்கிக்கொள்கிறோம் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். விரைவில் அந்தப் பணத்தைக் கொண்டு எங்கள் ஊரிலேயே ஒரு காரை வாங்கிவிடுவோம் என்று கூறினார். இந்த விவகாரம் விளையாட்டு துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

error: Content is protected !!