8 பந்து வீச்சுகளில் 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையை வெளிக்காட்டிய தினேஷ் கார்த்திக்!

8 பந்து வீச்சுகளில் 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையை வெளிக்காட்டிய தினேஷ் கார்த்திக்!

நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷபீர் ரஹ்மான் 77 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் சிறப்பாக விளையாடினாலும் ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்புக்கு சென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் இறங்கினார். 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக், இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி, உட்பட 22 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார். இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் விருதை தினேஷ் கார்த்திக்கும், வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

நேற்றைய தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார். இது அவரது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையின் கனவாகும். நேற்றைய கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளை எதிர் கொண்டார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

இத்தனைக்கும் நம் இந்திய அணி இவரை மிக அதிக அளவில் புறக்கணித்தது. நேற்றைய போட்டியில் கூட தாமதமாக இறக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். மிகவும் திறமையான வீரர் என்று தெரிந்தும் பிசிசிஐ நிர்வாகம் இவருக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை. தோனி இல்லாத சமயங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் கூட பர்தீவ் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுத்து தினேஷ் வாய்ப்பை பறித்த கதை நடந்து இருக்கிறது. இடமில்லை இவருக்கு நிறைய அனுபவம் இருந்தாலும், அணியை வழிநடத்தும் தலைமைப்பண்பு இருந்தாலும் ஒரு போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டது இல்லை. இவருக்காக பிசிசிஐ தொடங்கி தோனி வரை பலர் மீது இது பற்றி குறை சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் யாராவது சீனியர் வீரர்கள் வந்த பின் இவரது வாய்ப்பு பறிக்கப்படும்.

அதிலும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் விளையாட வாய்ப்பு கிடைக்காது. அதிலும் பேட்டிங் விளையாடும் அணியில் இடம் கிடைக்கும் போது கூட இவருக்கு பேட்டிங் ஆர்டரில் பெரிய வாய்ப்பு கிடைக்காது. 5 வது வீரராக சமயங்களில் இறங்குவார். இல்லையென்றால் அதற்கும் அடுத்தபடியாக இறங்கி இருக்கிறார். ஒரு முறை கூட 5 விக்கெட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டது இல்லை. அதனால் இவர் திறமையை வெளிப்படுத்த முடியவும் இல்லை.

இப்போதும் கூட இவருக்கு போட்டியாக இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அம்பதி ராயுடு, பர்த்தீவ் பட்டேல், சஞ்சு சாம்சன் என்ற பெரிய படையே இவரை மாற்றி தோனி போட்டியாக களமிறக்க காத்து இருக்கிறது. ஆனால் தோனிக்கு மாற்று இல்லை, நான் அதைவிட மேல் என்று இவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்துக் கொண்டுள்ளார்.

மேலும் ரெய்னா போல கொஞ்ச நாளில் உடல் தகுதியை இழக்காமல், இவர் இப்போதும் நல்ல உடல் தகுதியோடு இருக்கிறார். 14 வருடமாக பெரிய அளவில் உடல் பிரச்சனை, காயங்கள் எதையும் சந்திக்காமல் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் இளம் வீரர்களுடனும் போட்டியிட முடிகிறது.

நம் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக செப்டம்பர் 5, 2004ல் அறிமுகம் ஆனார். இந்த 14 வருடங்களில் இவர் 23 டெஸ்ட், 79 ஒருநாள், 19 டி-20 மட்டுமே ஆடியுள்ளார். இவருக்கு மிகவும் குறைந்த வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கெல்லாம் சேர்த்து நேற்று 8 பாலில் இவர் பதில் சொல்லி இருக்கிறார். இதை கவனத்தில் கொள்ள வேண்டும் கிரிக்கெட் நிர்வாகம்.

error: Content is protected !!