டிஜிலாக்கர்! -ஒவ்வொரு இந்தியனும் யூஸ் பண்ண வேண்டிய ஆப்ஸ்!

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் கேட்டு டிராபிக் போலீஸ் வழிமறித்தால் இனி மொபைல் போனை காட்டிவிட்டு செல்ல வசதியாக மத்திய அரசு ஆப்சில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

digilock sep 8

போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அடிக்கடி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகம் எடுத்துச் செல்லாதவர்கள் சிக்கித் தவிப்பார்கள். இதனால் அபராதம் மற்றும் இன்னும் பிற அவஸ்தைகளை அவர்கள் அனுபவித்து வந்தனர். தற்போது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்கும் வகையில் மத்தியஅரசின் ஆப்சில் புதியவசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. டிஜிலாக்கர் (DigiLocker) என்ற என்ற ஆப்சில் டிரைவிங் லைசென்சை இணைக்கும் நிகழ்ச்சி சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்தது.மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

இந்த ஆப்சில் நாடு முழுவதும் உள்ள 19.5 கோடி வாகனங்களின் ஆர்சி எண் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதோடு 10 கோடி டிரைவிங் லைசென்ஸ்களும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொருவரும் இந்த ஆப்சை தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போக்குவரத்து போலீசார் வழிமறிக்கும் போது ஆப்சை காட்டி அதில் உள்ள நமது லைசென்ஸ் மற்றும் ஆர்சி எண்ணை காட்டிவிட்டு செல்லலாம்.

இதுபற்றி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி “டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு ஆவணங்கள் அனைத்தும் டிஜிலாக்கர் ஆப்ஸ் மூலம் உங்கள் மொபைலில் காணலாம். இதை போக்குவரத்து போலீஸ், சட்ட அமலாக்க அதிகாரிகள் சோதனையின் போது காண்பிக்கலாம். உங்களை எந்த இடத்திலும் யாராவது தடுத்து நிறுத்தினால் அவர்களிடம் உங்கள் டிரைவிங் லைசென்சை உங்கள் மொபைல் மூலம் காண்பித்துவிட்டு செல்லலாம். ஊழலை ஒழிப்பதற்கு மட்டும் இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆன்லைனில் லைசென்ஸ் வழங்கும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தகவல் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ”டிஜிலாக்கர் மொபைல் ஆப்சை இதுவரை 21 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் வாக்காளர் அடையாள அட்டையை கூட பதிவு செய்து கொள்ளலாம்” என்றார்.