கர்நாடகா: சசிகலா ஜெயில் ஆடம்பரத்தை வெளிப்படுத்திய டி ஐ ஜி ரூபா டிரான்ஸ்ஃபர்!

கர்நாடகா: சசிகலா ஜெயில் ஆடம்பரத்தை வெளிப்படுத்திய டி ஐ ஜி ரூபா டிரான்ஸ்ஃபர்!

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா, ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி கசிந்தது.கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைஅதிகாரிகளுக்கும் ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறையில் சசிகலாவுக்காக தனிச் சமையலறை கட்டப்பட்டது. சமையல் செய்ய ஒரு கைதி ஒதுக்கப்பட்டார் என ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக் முதலவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அப்பொழுது சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர். ‘சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக நான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த அறிக்கை விவகாரத்தில் ஊடகங்களில் பேட்டியளித்தற்காக விளக்கம் கோரி கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக சிறையில் சசிகலாவுக்கு விருந்தினர்களை சந்திக்க என்று தனியாக குளிர்சாதன அறை வழங்கப்பட்டு உள்ளதாகவும், சிறை கேமராவில் பதிவாகியிருக்க கூடிய இது தொடர்பான சிசிடிவி பதிவுகள் உடனுக்குடன் அழிக்கப் படுவதாகவும் இரண்டாவது அறிக்கையினையும் டிஐஜி ரூபா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கர்நாடக சிறைத்துறை டிஐஜியான ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக தற்பொழுது, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தில் ஆர். அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் ரூபா. வேறு எந்தக் காரணமும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கூறினார். இந்த
டிராஸ்ஃபர்களும் அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சைகளைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!