August 8, 2022

தண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…!

இந்த தண்ணீர் தட்டுப்பாடு பற்றி டிவி-யில் சிலபேர்..பெரிய அப்பா டக்கர் அறிவு ஜீவிகள் மாதிரி பேசிகிட்டிருக்கிறார்கள். கேட்க- பார்க்க நெஞ்சு… ஞ்சு எல்லாம் எரிகிறது. அதுவும் ஒவ்வொருத் தரும் ஒவ்வொரு டிசைனில் பேசிட்டிருக்கிறார்கள். இப்போது இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை தான் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிக்கையில் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியிருந்தார். அதற்கு முன்பிருந்தே மேடைகளில் பேசி வந்திருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் வேறு எந்த அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையும் சீமான் சொன்னதைப் போல் தொலை நோக்குப் பார்வையில் ’நீர் மேலாண்மையைப் பற்றி’ அவ்வளவு விரிவாக பேசவில்லை. எழுத வுமில்லை.

ஆனால், அந்த கட்சி மீதும், சீமான் மீதும் இருக்கின்ற வெறுப்பில் தூற்றி, நக்கலடித்து, ‘இது எப்படி சாத்தியம்-அது எப்படி’ சாத்தியம், சுத்த கற்பனை என்றெல்லாம் இந்த அரசியல் கட்சியின் ஆதரவு ‘அறிவு ஜீவிகள்’ தூற்றினார்கள். நையாண்டி செய்தார்கள்.

ஒருவர்கூட அறிவைப் பயன்படுத்தி ‘சாத்தியமாகுமா’ என்று யோசிக்கவில்லை.

இப்போது நமக்கான தண்ணீரின் தேவை 1300 மி.லிட் தண்ணீர் என்கிறார்கள். அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருப்பதோ வெறும் 650 மி.லிட்டர்தான். மீதத் தேவை தனியாரிடம்தான் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். ஒரு சில இடங்களில் நிலத்தடி நீரும் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. உப்பு நீராக. அதையும் பயன்படுத்தி வருகின்றோம்.

இப்படியான தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…

“காவிரித் தண்ணீர் நம் உரிமை. அதை பெற்றுக்கொள்ள போராட வேண்டும்தான். ஆனாலும் அதை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதைவிட்டு, குளம், ஏரி, கன்மாய்களை ஆழப்படுத்துங்கள். தமிழகத் தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1300 முதல் 1400 மி.லிட். அளவு வரை மழை பொழிகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இதைவிடக் குறைவு.

ஆனால், தமிழகத்தில் பொழியும் இவ்வளவு மழை நீரும் வீணாகச் சென்று கடலில் கலந்து கொண்டு இருக்கின்றது. அதை ஆங்காங்கே தடுத்து, தேவைக்கேற்ப சிறிய பெரிய அணைகளைக் கட்டி, அந்த நீரைத் தேக்க வேண்டும். அதை அந்த சுற்று வட்டாராப் பகுதிகளில் உள்ள கிணறு, குளம், குட்டை, ஏரி, கன்மாய் உள்ளிட்ட அனைத்திலும் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே தூர்ந்து-ஆக்ரமிப்பில் உள்ள நீர் நிலைகளை எல்லாம் மீட்டு, மீண்டும் தூர்வாரி, அதற்கான நீர்வரத்துப் பாதைகளையும் சரி செய்து மழைக்காலங்களில் நீரைத் தேக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படி செய்தால் நிலத்தடி நீர் பெருகும், நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்திருக்கும். விவசாயத்தை பெருக்கலாம். மனிதர்கள் உள்ளிட்ட ஆடு,மாடுகள் என எல்லா ஜீவராசிகளுக்கும் தண்ணீர் பஞ்சம் வராது. கார்நாடக மாநிலம் தண்ணீரைத் தருமா, ஆந்திர மாநிலம் தண்ணீரைத் தருமா என்று ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த திட்டத்தை ஒவ்வொரு மாவட்டங்களுக்கு விரிவு படுத்தி முதன்மை பணியாக செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கி சாலையெங்கும் நீர் நிலைகளை ஏற்படுத்த-ஆங்காங்கே குளங்களை வெட்டி வைக்க வேண்டும். அது ஆடு மாடுகளுக்கும் பயன்படும், விவசாயத்திற்கும் பயன்படும்.

நமக்குத் தேவை சரியான திட்டங்கள். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான தலைமைகள் தான்.” என்று சீமான் பேசியிருந்தார். கட்சியின் கொள்கை வரைவில் முக்கியமானதாக கூறியிருந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இதை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை படுத்தியிருந்தால்கூட இவ்வளவு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது.

சீமான் பேசியதற்காகவே நக்கல் நையாண்டி செய்த அதே கட்சி சார்பு ‘அறிவு ஜீவிகள்’ கூட்டத்தினர் தான் இப்போது அதே நீர் மேலாண்மை கருத்தை ‘புது புது டிசைன்களில்’ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

கடல்நீரை குடிநீராக மாற்றித் தருவோம் என்கிறார்கள். அது நிரந்தர தீர்வல்ல. கால் நடைகளுக்கு என்ன செய்ய முடியும், நிலத்தடி நீருக்கு என்ன செய்வது? விவசாயத்திற்கு எங்கே போவது.?

எனவே இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். சென்னைக்குள்ளாக மிஞ்சியிருக்கும் நீர் நிலை களையாவது தூர்வாரி ஒழுங்கு செய்யவேண்டும். மழைவெள்ளம் காலத்தில் மூழ்கி விடக் கூடாதல்லவா?

தவிர மாநிலம் முழுதும் உள்ள ஏரி குளங்களை மராமத்து செய்ய 499 கோடியை ஒதுக்கியிருப்பதாக கூறியிருக்கிறது அரசு. அதையாவது ஒழுங்காக கண்காணித்து, நிறைவாக்க வேண்டும் என்பதே இன்றைய அவசரக்கால குரல்.

குறிப்பு- எரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை எல்லாம் விற்றுத் தின்ற அரசியல் கட்சியின் ஆதர வாளர்கள் இங்கே வந்து குதிக்கக்கூடாது. தண்ணீர் பஞ்சத்தில் ‘கழுவி ஊற்றகூட’ முடியாது என நினைத்து விட வேண்டாம்..

பா. ஏகலைவன்