’ கொடி பார்க்க வரலையோ- கொடி பார்க்க!’ – கூவி அழைக்க தனுஷ், த்ரிஷா டீம் வாராங்கோ!

’ கொடி பார்க்க வரலையோ- கொடி பார்க்க!’ – கூவி அழைக்க தனுஷ், த்ரிஷா டீம் வாராங்கோ!

கிராஸ் ரூட் பிலிம்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வழங்கும் திரைப்படம் “ கொடி “ இப்படத்தில் நடிகர் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை “ எதிர்நீச்சல் “ “ காக்கி சட்டை “ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக வெளிவரும் இப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் காணும் வகையில் சென்சார் குழு “ யு “ சான்றிதழ் வழங்கியுள்ளது.

kodi oct 22

கொடி ஒரு அரசியல் சார்ந்த கதை களம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது அரசியல் படம்தான். ஆனா, அரசியலை நையாண்டி செய்யற படமில்லையாம். அதாவது உலகில் போதை தரக்கூடிய விஷயங்கள்னு மது, மாது, சூதுனு சொல்லுவாங்க. ஆனா எல்லாத்தையும் விட மோசமானது, ‘புகழ்’ தரக்கூடிய போதை. அதைத் தேடி ஓடினா வாழ்க்கையில எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும்ங்கறதை ஆக்‌ஷன் கலந்து கமர்ஷியலா சொல்லியிருப் பதாகவும் . தாலிக்கொடி, தொப்புள் கொடி, அரசியல் கட்சிக் கொடி… இந்த மூணு கொடிகளையும் கடந்து வரும் இளைஞனைப் பற்றிய கதைங்கறதால, எல்லாத்துக்கும் பொருத்தமா ஒரு டைட்டில் யோசிச்சு ’கொடி’ என்று நாமகரணம் சூட்டியிருப்பதாகவும் படத்தின் இயக்குநர் தகவல். மேலும் கொடி’யில தனுஷ் , இரட்டையரா பிறந்த அண்ணன் – தம்பியா நடிச்சிருக்கார். அண்ணன், அரசியல்வாதி; தம்பி, கல்லூரியில் பேராசிரியர். அரசியல்வாதிக்கு த்ரிஷா ஜோடி. இன்னொருத்தருக்கு அனுபமா ஜோடி.

வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் நிலையில் ‘கொடி; படத்தை பார்க்க வாங்கோ,, வாங்கோ-ன்னு கூவி அழைக்க நாயகன் தனுஷ் , நாயகி த்ரிஷா , பாடலாசிரியர் அருண்ராஜாகாமராஜா , நடிகர் காலி வெங்கட் ஆகியோர் அக்டோபர் 25 , 26 ஆகிய தேதிகளில் சேலம் , கோவை , திருச்சி , மதுரை , நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு செல்கின்றனர்

error: Content is protected !!