தேவ் – திரைப்பட விமர்சனம்!

தேவ் – திரைப்பட விமர்சனம்!

காதல் என்பது ஆழமானது, தெய்வீகமானது.,கண்டவுடன் வருவதே காதல்.,அந்த காதலுக்கு கண் கள் கூட கிடையாது என்றெல்லாம் உரக்க சொல்லும் நபர்கள் எத்தனையோ பேர்களை பார்த்தி ருக்கிறோம். ஆனால் மேற்கண்ட விஷயத்தை லாஜிக், கதை, திரைக்கதை அல்லது ஈர்ப்பு எதுவுமே இல்லாமல் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சினிமாவாகவே எடுத்துக் காட்டி நம்ப வைத்திருக்கிறார்கள். ஆம். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்  டைரக்‌ஷனில்  கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படம்தான் அது.

விட்டேத்தியாக பொழுது போக்கிக் கொண்டு  ஹாபி, என்ஜாய்,  காதல் &  இசை, அது , இது என்று  எதையதையோ பேசித் திரிவதை விரும்பும் இன்றைய சில இளைஞர்களின் கனவுப் படம்தான் இந்த தேவ்.  அதாவது அட்வெஞ்சர் (என்ற சொல்லை மட்டும்) விரும்பும் ஹீரோ கார்த்தி. இவர் எங்கே போனாலும் தனது நண்பர்களான விக்னேஷ் காந்த் மற்றும் அம்ருதாவை கூடவே கூட்டிச் செல்கிறார். கார்த்தியின் இந்த அன்பு தொல்லையால் கடுப்பாகும் விக்னேஷ் காந்த், கார்த்தியிடம் ஒரு லவ் தடவை லவ் பண்ணி பார்க்கறதும் அட்வென்ஜர்தான் என்று உசுப்பேத்தி  அவருக்கேத்த ஜோடியை பேஸ்புக்கில் தேடுகிறார். அப்போது கண்ணில் படுகிறார் மேக்னா (ரகுல் ப்ரீத்)

அப்படி கண்ணில் பட்ட ஹீரோயின் ரகுல் ப்ரீத் தன் அப்பா தன்னையும் தன் அம்மாவையும் கை விட்டு விட்டதால் ஒட்டு மொத்த ஆண் வர்க்கம் மீதே நம்பிக்கை இழந்து சுயமாக ஒரு தொழில் சாம்ராஜ்யத்த்தின் அதிபதியானவராம். அதனால் என்ன..!? நாயகன் பார்த்தவுடன் காதல் வந்து விட்டதால் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கை விரட்டி விரட்டி காதலில் விழ வைத்து விடுவது சகஜம் தானே. அப்படி ஓ.கே மற்றும் அட்ராக்ட் பண்ணி ஓ(ட்)டி கொண்டிருக்கும் காதலில் நடந்த ஊடல் மற்றும் யதார்தமான விவகாரங்கள்தான் மிச்சக் கதை.

இளமை துள்ளலான இந்த கேரக்டருக்கு நாயகன் கார்த்தி கொஞ்சம் அந்நியமாகவே தோற்ற மளிக்கிறார். ஆனாலும் பேசும் வசனங்கள் மூலம் கவர்கிறார். தீரன் அதிகாரத்தில் இதே கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து பார்ப்போரை உசுப்பேத்திய ரகுல் ப்ரீத் சிங் இதிலும் இணைந்து இருக்கிறார். இந்த பட கேரக்டர் கொஞ்சம் அகம்பாவம் பிடித்த ரோல் என்பதை சரியாக புரிந்து டைரக்டர் சொன்னதை செய்திருக்கிறார். ஆனாலும் தன் கம்பெனி புது தயாரிப்பை அறிமுகப் படுத்தும் போது கூட தொண்டை நரம்புகள் புடைக்கும் காட்சிகளும், அந்த மேடை சூழ்நிலையில் தன் குடும்ப பின்னணியை சொல்வதும் எடுபடவில்லை. அது போல் ஹீரோ அப்பா ரோலில் வரும் பிரகாஷ் ராஜூம், ஹீரோயின் அம்மா கேரக்டரில் வரும் ரம்யா கிருஷ்ணனும் வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.

காமெடிக்கு விக்னேஷ் காந்த் -ஓப்பனிங்கில் புளூ சட்டையை போட்டுகிட்டு காம்பியர் பண்ணினா போலீசில் கம்ளையண்ட் கொடுத்துடறாங்க என்பதில் தொடங்கி அடிக்கடி கடிக்கும் டாபிக்கல் டயலாக்கின் போது மட்டும் அப்ளாஸ் அடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜின் பாடல் & பின்னணி இசை மனசில் ஒட்டவில்லை. ஆனால் வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆஹா.. ஓஹோ..பேஷ்.. பேஷ்.. ரொம்ப நல்ல இருக்கு ரகம்..!

இப்படி சில பல குறைகள் இருந்தாலும் இன்றைய மிடில் கிளாஸூக்கு கொஞ்சம் மேல் மட்ட இளைஞர், இளைஞிகளின் எண்ணங்களை, நடத்தைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் ஏராளம் கொண்ட இந்த தேவ் இப்போதைய காலக் கண்ணாடி என்றே சொல்லாம்!

மார்க் 2.75 / 5

error: Content is protected !!