September 24, 2021

கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு : போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வினுக்கு 22. 6 ஆண்டுகள் சிறை !!

லகின் பெரியண்ணா என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் அளவுக்கு மாபெரும் கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு வித்திட்டது ஜார்ஜ் பிளாய்ட் கொலை சம்பவம். போன வருசம் நட்ந்த இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மினியாபொலிஸ் நகர காவல் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.6 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க – அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் கடந்த 2020 -ம் ஆண்டு மே 25-ம் தேதி அந்நாட்டில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் மினியாபொலிஸ் சிட்டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஜார்ஜ் பிளாய்ட்யை மடக்கிப்பிடித்தனர். அப்போது காவல் அதிகாரி டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் 10 நிமிடத்திற்கும் மேலாக காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறலால் துடிதுடித்து உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தார் பிளாய்ட்.

இதை அவ்வழியாக சென்ற இளம்பெண் ஒருவர் தன் போனில் ரிக்கார்ட் செய்த அந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. உயிருக்கு போராடி துடிதுடித்து மரணித்த ஜார்ஜ் பிலாய்ட்-ன் இந்த வீடியோ உலக மக்கள் அனைவரின் மனதையும் உலுக்கும் விதமாக இருந்தது. ஊரடங்கை மீறி உலக மக்கள் நிறவெறிக்கு எதிராக நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறை அதிகாரி டெரிக் சவால் உடன் இருந்த மேலும் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ் பிலாய்ட் குடும்பத்தினர் அவர்களின் மேல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. மினசோட்டா நீதிமன்றத்தில் நீதிபதி பீட்டர் காஹில் அரசு தரப்பில் அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் போலீஸ்காரர் டெரிக் சாவின்க்கு 22.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.