March 27, 2023

நவம்பர் 8ம் தேதி கருப்பு தினம் ! -எதிர்க்கட்சிகள் முடிவு!

கருப்பு பணம், கள்ளநோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றை ஒழிக்கும் நோக்கில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ஒரே நாள் இரவில் செல்லாததாகி விட்டது.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் இரண்டாவது நாளாக இன்றும் எதிர்கட்சிகள் இது தொடர்பாக கூடி ஆலோசனை நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்கட்சிகள் முடிவு செய்தன.

இந்நிலையில் இது குறித்து இன்று பேட்டியளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் எதிர்கட்சிகள் அனைத்தும், தேசிய அளவில் ஒன்றிணைந்து நவம்பர் 8ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.