புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க கோரியவருக்கு அபராதாம்!

புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க கோரியவருக்கு அபராதாம்!

ந்த கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் இந்திய மக்கள் பலரின் வாழ்வாதாரம் முடங்கிய சூழலிலும் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் ரொம்ப முக்கியமானது என்று சொல்லி மத்திய விஸ்டா பகுதியில் அமைப்பதற்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டிஎன் பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் அன்யா மல்ஹோத்ரா என்பவர் மத்திய விஸ்டா பகுதியில் புதிய கட்டுமானங்களை உருவாக்க தடை விதிக்கும்படி கோரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.இன்று கோவிட்-19 வைரஸ் பெரும் தொற்றாக பரவி வரும் சூழலில் இந்தக் கட்டுமானப் பணிகள் அவசியம் அல்ல. எனவே கட்டுமான பணிகளுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

ஆனால் இந்தப் பெரும் தொற்று காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இந்த திட்டத்தின் காரணமாக கிடைக்கிறது என்பதை மனுதாரர் மறந்துவிட்டார் என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா குறிப்பிட்டார். மத்திய அரசு தன்னுடைய திட்டப் பணிகளை நிறைவேற்ற விடாமல் பொதுநல மனு என்ற பெயரில் முட்டுக்கட்டை போட மனுதாரர் முயற்சிக்கிறார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட் அமர்வு தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கடந்த மே மாதம் 17ஆம் தேதி அறிவித்தது.

இதை அடுத்து மேற்படி அன்யா மல்ஹோத்ரா பொதுநல மனு மீது இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த மெஹா சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியமான ஒன்று என கருத்து தெரிவித்துள்ளது கூடவே பொது நல மனுவை நிராகரிப்பதாக அறிவித்து தேவையில்லாமல் இவ்வழக்கு தொடர்ந்ததற்காக நீதிமன்ற செலவுகளுக்காக மனுதாரர் 1 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

error: Content is protected !!