டெல்லியில் தமிழுக்காக அகாடமி; ஆம் ஆத்மி அரசு நிறுவியது!

டெல்லியில் தமிழுக்காக அகாடமி; ஆம் ஆத்மி அரசு நிறுவியது!

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் அம்மாநில துணை முதல்வரும், கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தலைமையின் கீழ் தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழுக்கான அகாடமி, நேற்று நிறுவப்பட்டது. இந்த அகாடமிக்கு முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும், டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினருமான என்.ராஜா, துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அகாடமிக்கு, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன், கட்டடம் மற்றும் அலுவலகமும் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

இந்திய தலைநகர் டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின் றனர். இதை அடுத்து தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை (அகாடெமி) உருவாக்கி உள்ளோம் என்று தெரிவித்துள்ளது டெல்லி மாநிலஅரசு. அதாவது நம் தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்து வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை டெல்லி மாநிலஅரசு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் தலைவராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக டெல்லி மாநகராட்சி முன்னாள் தலைவர் என். ராஜா ஆகியோரை நியமித்து டெல்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் தலைமையின் கீழ் இயங்கும் டெல்லி கலை, கலாசாரம், மொழித் துறையில் தமிழ் மொழி, அதன் கலாசாரத்தை மேம் படுத்துவதற்காக தமிழ்க் கலைக்கழகம் (அகாடெமி) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் தலைவரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை தமிழ்க் கலைக்கழகத்தின் துணைத் தலைவராக டெல்லி அரசு நியமித்துள்ளது.

டெல்லி என்பது கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் இங்கு வசித்து, பணியாற்றி வருகின்றனர். இந்தப் பன்முகத்தன்மையே டெல்லியைத் துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக உருவாக்குகிறது. டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை உருவாக்கி உள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!