தப்பிச்சிட்டாய்ங்கய்யா.. நிர்பயா குற்றவாளிகள் தூக்கு தண்டனையில் இருந்து இப்போவும் தப்பிச்சிட்டாய்ங்க!

தப்பிச்சிட்டாய்ங்கய்யா.. நிர்பயா குற்றவாளிகள் தூக்கு தண்டனையில் இருந்து இப்போவும் தப்பிச்சிட்டாய்ங்க!

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறுபடியும் நிறுத்தி வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நால்வருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விசாரணை கோர்ட் பிறப்பித்த வாரண்டை நிறுத்தி வைத்தும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் புரிந்தபோது தனக்கு 16 வயது என்பதால் சிறார் தண்டனை சட்டத்தின் வழக்கின் கீழ் தன்னை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தான். இதனைத் தொடர்ந்து இவனது மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டது. ஏற்கனவே மார்ச் 3 ஆம் தேதி 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.இதனையடுத்து பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று மதியம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியின் மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

இதனைத் தொடர்ந்து நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கான தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை என உத்தரவிட்ட பிறகு இது மூன்றாவது முறையாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதை அடுத்து

செசன்ஸ்.

ஐகோர்ட்,

சுப்ரீம்கோர்ட் ,

ஜனாதிபதியிடம் கருணை மனு

நாலாவது விவகாரமே திட்டவட்டமா முடிஞ்ச பிறகும் எதுக்கு ரெண்டு ஸ்டெப்ஸ் பேக் வந்து தூக்கு தண்டனை விவகாரம் திருப்பி திருப்பி ஐகோர்ட்டை சுத்தி வருதேன்னு தெரியலை..

உலகத்துலேயே அருமையான நீதித்துறை நம்ம நாடுதான் போல..

குற்றம் செய்ய அஞ்சாதவர்களின் மிகப்பெரிய பலமே,  ”மாட்டவே மாட்டோம். அப்படியே மாட்டினாலும் நீதித்துறை அவ்வளவு விரைவாக தண்டித்து விடாது ” என்பதுதான்..

என்று பிரபல பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்

error: Content is protected !!