Exclusive

டெல்லி மாநகராட்சி: பாஜக வை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி!

ந்திய தலைநகர் டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக செலுத்திவந்த ஆதிக்கத்தை ஆம் ஆத்மி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்த வெற்றியையடுத்து டெல்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ள அம்மாநில முதல்-மந்திரியும் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இனி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் எனக் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனை மிகப்பெரிய வெற்றியாக பார்க்காமல்,மிகப்பெரிய பொறுப்பாக பார்ப்பதாகவும் அவர் கூறினார். மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 136 வார்டுகளிலும், பாஜக 99 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எளிதாக வாய்த்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

டெல்லியில் 250 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 4 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் மூன்று சிவில் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுவது இதுவே முதல்முறை. 2017-ல், பாஜக 270 நகராட்சி வார்டுகளில் 181 ல் வென்றது. அந்த தேர்தலில் ஆம் ஆத்மி 48ல் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் 30 இடங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தற்போது ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது

இந்நிலையில் இன்று காலை 8 மணி தொடங்கி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 43 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட போக்கின்படி பாஜக, ஆம் ஆத்மி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. நெக் டூ நெக் என்றளவில் போட்டி என்ற சூழலே இருந்தது. 126 வார்டுகளைக் கைப்பற்றும் கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றும். இந்தச் சூழலில் 126 வார்டுகளையும் தாண்டி 131 தொகுதிகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.சற்று முன்னர் மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக 239 வார்டுகளின் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஆம் ஆத்மி 136 வார்டுகளிலும், பாஜக 99 வார்டுகளிலும் காங்கிரஸ் 7 வார்டுகளிலும், சுயேச்சை 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

டெல்லி மாநக்ராட்சி தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களிடம் உரையாற்றிய அர்விந்த் கேஜ்ரிவால், “முதலாவதாக, எங்களுக்கு வாக்களித்ததற்காக டெல்லி மாநகராட்சி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று, டெல்லி மக்கள் டெல்லியின் குடிமை அமைப்பின் பொறுப்பையும் எங்களுக்கு வழங்கியுள்ளனர். பள்ளிகளை மேம்படுத்தும் பொறுப்பை மக்கள் எங்களுக்கு வழங்கினர். அதை செய்தோம். மேம்பட்ட மருத்துவமனைகளை உருவாக்குவோம் என்று மக்கள் எங்களை நம்பினார்கள், நாங்களும் அதை செய்தோம். பிறகு எங்களுக்கு இலவசக் கல்வி, இலவச மின்சாரம் வேண்டும் என்று வாக்களித்தார்கள், அதையும் நாங்கள் வழங்கினோம், இப்போது நகரத்தில் உள்ள குடிமை வசதிகளுக்காக எங்களை நம்பியிருக்கிறார்கள். நான் அவர்களை கைவிடமாட்டேன்.நானும் உங்களை நேசிக்கிறேன்.கட்சியினர் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், இப்போது நாம் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்.தேர்தல் முடிந்துவிட்டது, இப்போது செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். இனி அரசியல் தேவையில்லை, இப்போது நகரத்தை மேம்படுத்துவதற்கான உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் தேவை” என்று தெரிவித்தார் இச்சூழலில்நாளை (டிசம்பர் 8ஆம் தேதி) வெளியாகும் குஜராத் மற்றும் இமாச்சல சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன . இதிலும் ஆம் ஆத்மி குஜராத்தில் பெரிய அளவிலான வாக்கு விகிதத்தை எதிர்பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

aanthai

Recent Posts

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…

21 hours ago

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

2 days ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

2 days ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

2 days ago

பொம்மை நாயகி -விமர்சனம்!

இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…

2 days ago

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு செயலியும், இன்ன பிறவும்!

இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…

2 days ago

This website uses cookies.