October 17, 2021

ஆறு நீர்மூழ்கிகளை ரூபாய் 43 ஆயிரம் கோடி செலவில் கொள்முதல் முதல் மோடி அரசு முடிவு!

நாட்டின் மிக மோசமான வர்த்தக நிலையை அறிந்த ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு முன்னதாகவே 30000 ரூபாய் கோடி ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் இந்திய கடற்படைக்கு 6 நவீன நீர்மூழ்கி கப்பல்களை விலைக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாரம்பரியமான நீர்மூழ்கி வகைகளை சேர்ந்த இந்த 6 நீர்மூழ்கிகளை ரூபாய் 43 ஆயிரம் கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பாவம் படும் அளவிற்கு கொத்து கொத்தாக பாதிப்புகளும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகல் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், நம் நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து 6 நீர்மூழ்கிக் கப்பல்களைச் சுமார் 43,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் டிபென்ஸ் அக்வசிஷன் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளதன் வாயிலாகத் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. மேலு இந்த நீர் மூழ்கி கப்பல்களை உருவாக்கி இந்தியாவின் கடற்படைக்கு வழங்குவதற்கு அன்னிய நீர்மூழ்கி கட்டும் கம்பெனிகள் பட்டியல் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் கம்பெனிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கம்பெனிகள் வசம் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.