March 26, 2023

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாக பல புதுமையான நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றன.இதில் குறிப்பாக ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன்தலைமையில் நடைப்பெற்ற அறம்  செய்வோம் என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது .மக்களிடையே மனிதநேயம் தழைக்க வழிகாட்டும்நிகழ்ச்சியான அறம்  செய்வோம் தீபாவளி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது .தீபாவளி அன்றுகாலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நேயர்களுக்கு சிறந்த விருந்தாய் அமையும்

.அடுத்து காலை 9:00மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .நாட்டையே உற்றுபார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில்சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்த சிறப்புபட்டிமன்றம் அறிவுக்கு விருந்தாகும் வகையில் ஒளிபரப்பாகிறது.

காலை 11:3​0  மணிக்கு ஒளிபரப்பாகும்  முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை நிகழ்ச்சி” நவீன நாட்டாமை”   நகைச்சுவை நாயகர்கள் முல்லை கோதண்டம் இருவரும் இணைந்து கிராமத்து நாட்டாமையாகதீர்ப்பு சொல்லும் வித்தியாசமான .இந்த நிகழ்ச்சி தீபாவளியை கொண்டாடும் சிரிப்பு வெடியாகமலர்கிறது .