தீபாவளி… எப்படி..? இப்படி..அப்படியா???

தீபாவளி… எப்படி..? இப்படி..அப்படியா???

நம்ம தமிழ் நாட்டுலே சோழர் காலம் வரை இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் பொத் பொதலா தீபாவளி கொண்டாடப்பட்டதாம். ஆனாலும் தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகைதான் -ன்னு சொன்னா நம்பணும். வாத்ஸ்யாயனர் (அவரேதான்) எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

deepavli oct 29

இதுக்கிடையிலே கயிலாய பர்வதத்தில் தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்களாம். அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வாராங்க..அத்தோட அம் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்னிக்கு சின்ன குழந்தை தொடங்கி யூத்-துங்க பட்டம் பறக்க விட்டு ஹேப்பியா இருப்பாங்கஃ..

பீகார் ஸ்டேட்டுலே தீபாவளிக்கு டூ டேஸூக்கு முன்னாடி தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கறாங்க. இந்த விழாவுக்கு ‘தன்தெராஸ்’ என்று பெயர். அதே பீகாரில் ஒரு பிரிவினர், மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகன் தனது திக் விஜயத்தை முடித்து, நாடு திரும்பிய நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாகக் கருதுகின்றனர். அன்னிக்கு செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது நம்பிக்கை.

உத்தரப்பிரதேச மாநிலத்திலே, சீதாதேவியை மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வெஸ்ட் பெங்காலில் காளிதேவி வழிபாடாக… ‘மகாநிசா’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அன்று புத்தாடை மற்றும் ஆபரணம் வாங்கும் வழக்கமில்லை.

கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன ராஜா வருஷா வருஷம் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் திருவரங்கநாதர் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று திருவரங்கனுக்கு விசேஷமாக `ஜாலி அலங்கார’ வைபவம் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும்.

இதே தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.

புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பௌத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

உஜ்ஜயினி அரசன் விக்கிரமாதித்தன், ‘சாகாஸ்’ என்பவர்களை வென்று, வாகை சூடிய நாள் தீபாவளி என்பர்.

வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுது.

கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. பூச்சட்டி கொளுத்தும்போது, எவரது வாணம் அதிக உயரத்தில் சென்று பூக்களைக் கொட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலையில் எழுந்து, ‘உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்து குளிக்கின்றனர்.

நேபாளத்தில், தீபாவளியை ‘தீஹார்’ திருவிழாவாக 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பிராணிகளுக்கு உணவு படைப்பாங்க!

Related Posts

error: Content is protected !!