February 6, 2023

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மறைந்த நாள்!

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இதே நாளில் (2018) உலகை விட்டு மறைந்து விட்டார்.

நரம்பியல் சார்ந்த ALS பாதிப்புக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டிற்கு மேல் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்று பொதுவாக மருத்துவம் கூறிவரும் போதிலும், தனது 21 வயதில் ALS பாதிப்பிற்கு உள்ளாகிய ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகளுக்கும் அதிகம் உயிருடன் இருந்துவரும் அதிசய மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம். பொதுச் சார்புக் கோட்பாடு மற்றும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தல் போன்ற அறிவியல் ஆய்வுகளில் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) பங்கு மிகப் பெரியது. கை கால்கள் முடங்கிப் போனாலும் கணினியின் உதவியுடன் தன் ஆயுள் முழுவதும் அறிவியலுக்கு தன் பங்களிப்பை வழங்கிக்கொண்டே இருந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அவரின் மனவலிமை நாம் அனைவரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

அப்பேர்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் பொன் மொழிகளில் சிலவற்றை இந்நாளில் பகிர்ந்து அஞ்சலி செலுத்துவோமா?

வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அங்கே உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றியடையக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும்.

அமைதியான மனிதர்கள் சத்தமான மனங்களைக் கொண்டவர்கள்.

புத்திசாலித்தனம் என்பது மாற்றத்திற்கு ஏற்ப மாறும் திறனாகும்.

எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டது மேலும் அதை மாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியாது, என்று கூறும் நபர்கள் கூட சாலையைக் கடப்பதற்கு முன் பார்த்துத் தான் கடக்கிறார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன்.

இளைஞர்கள் தங்கள் வியப்புணர்ச்சியை தக்க வைத்திருப்பது, மற்றும் ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியமானது.

நான் கடவுளுக்கு அஞ்சவில்லை, நான் அவருடைய விசுவாசிகளுக்கு அஞ்சுகிறேன்.

வாசித்தல் மற்றும் மேலும் மேலும் அதிக அறிவைப் பெறுதலை விட சிறந்தது எதுவும் இல்லை.

நாங்கள் ஒரு சராசரி நட்சத்திரத்தின், ஒரு சிறிய கிரகத்தில் வசிக்கும், குரங்குகளை விட மேம்பட்ட இனமாகும். ஆனால் எங்களால் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதுவே எங்களை மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக மாற்றுகிறது.

காலப் பயணம் உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் எங்கே?

நாம் அனைவரும் இப்போது ஒரு பெரிய மூளையில் உள்ள நியூரான்களைப் போல இணையத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்.

ஒருமுறை நீங்கள் என் வழியைப் பார்த்தால், என்னுடன் பழகுவது மிகவும் எளிதானது.

துன்பமான நேரத்தில் சிரிக்கும் நபர், அநேகமாக ஒரு பலிகடாவை வைத்திருக்கலாம்.

எதுவும் என்றென்றும் நிலைத்திருக்க முடியாது.

தங்கள் நுண்ணறிவைப் பற்றி பெருமை பேசும் நபர்கள் தோல்வியுற்றவர்கள்.

கடவுள் இல்லை என்பதை ஒருவராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் விஞ்ஞானம் கடவுளை தேவையற்றதாக ஆக்குகிறது. இயற்பியலின் விதிகளால் ஒரு படைப்பாளரின் தேவை இல்லாமல் பிரபஞ்சத்தை விளக்க முடியும்.