பேரிச்சம் பழம்: கெமிக்கல் கலந்து தயாரிக்கிறார்கள்!- வீடியோ!

பேரிச்சை என்பது பனை வகையை சேர்ந்த ஒரு மரம். இது 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். இம்மரம் தமிழகத்தில் காணப்படும் ஈச்சமரம் போன்ற அமைப்பை உடையது. இந்த பேரிச்சம்பழம் அரபு நாடுகளில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில் 120 வகை பேரிச்ச மரங்கள் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன. பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது. அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் என்று எல்லா பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இதற்கு இடமுண்டு. உடலுறவில் ஈடுபட விரும்புவோர், அதிக சக்தியைப் பெற விரும்புவோர், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவோர் பேரிச்சம் பழங்களை அதிகமாக உட்கொள்கின்றனர். பெரும் இச்சை என்ற பொருளில் இதற்குப் பேரிச்சை என்ற பெயரை வைத்தவர்கள் நிச்சயம் போற்றுதலுக்கு உரியவர்கள். தரம் குறைந்த பேரிச்சம் பழங்கள் விலங்குகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின் அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இந்த பேரிச்சம் பழத்தில் அதிகமாக குளுக்கோஸ், பிரக்டோஸ், நார்ச் சத்து, வைட்டமின்கள், பாலிஃபீனால்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்பு உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்துள்ளன. இதில் பல்வேறு வகைகளும் உண்டு.

பேரிச்சையில் இருக்கும் நார்ச் சத்துகள், அமினோ அமிலங்கள் செரிமானச் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. இதனைத் தினமும் பாலுடன் கலந்து உண்டால் உடல் ஆற்றல் அதிகரிக்கும். இதில் இருக்கும் அதிக பொட்டாசியம், குறைந்த அளவிலான சோடியம் நரம்பு மண்டலத்துக்கு உத்வேகம் தருகிறது. இதனால் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியன இருப்பதால், பேரிச்சம் பழம் சாப்பிடும் போது எலும்புகளின் உறுதி அதிகரிக்கிறது. எலும்புகள் தேய்மானம், மூட்டு பிரச்சனைகள் இதனால் சரி செய்யப்படுகின்றன.

இதே பேரிச்சம் பழம் நன்கு பளபளவென்று இருப்பதற்கு, அதன் மேல் சல்பைட் என்னும் கெமிக்கல் பூசப்படுகிறது. இந்த சல்பைட் பேரிச்சம் பழத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக் களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஒரு வேளை உங்களுக்கு சல்பைட் சகிப்புத்தன்மை இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிடும் போது, அதன் விளைவாக வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் பேரிச்சம் பழத்தில் ஹிஸ்டமைன் என்னும் அலர்ஜியை உண்டாக்கும் பொருள் உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் சாலிசிலேட் என்னும் தாவரங்களில் இருக்கும் ஒரு வகையான கெமிக்கல் உள்ளது. இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தான் சிலருக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்டால், சருமத்தில் அலர்ஜியை சந்திக்க நேரிடுகிறது.

அத்துடன் பேரிச்சம் பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இது கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்த உணவாக கருதப்படுகிறது. பேரிச்சம் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 103 உள்ளது. சாதாரணமாக பேரிச்சம் பழத்தை ஒன்று சாப்பிடும் போதே, சட்டென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதிலும் ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது, அது டைப்-2 சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.

அதெல்லாம் சரி.. இந்த பேரிச்சம் பழம் இப்படியும் தயாரிக்கிறார்கள் தெரியுமா?காயை – கொதிக்கும் சர்க்கரை பாகில் ஊற வைத்து- தேவையான சாயம் ஏற்றி / கெமிக்கல் கலந்து விற்பனைக்கு வருகிறது……. என்ற குறிப்போடு நம் கவனத்துக்கு வந்த வீடியோ-வை நீங்களேப் பாருங்களேன்

aanthai

Recent Posts

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல…

8 hours ago

தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர்!

2022ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த…

8 hours ago

பவுடர் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

வெற்றிகரமான பத்திரிகை தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை…

9 hours ago

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

1 day ago

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி…

2 days ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

2 days ago

This website uses cookies.