July 28, 2021

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது!

புலிட்சர் விருது என்பது செய்தித்தாள், பத்திரிகை மற்றும் ஆன்லைன் பத்திரிகை, இலக்கியம் மற்றும் இசை அமைப்பு ஆகியவற்றில் பெற்ற சாதனைகளுக்கான அமெரிக்காவினர் வழங்கும் விருதாம். இது 1917 ஆம் ஆண்டில் அமெரிக்க (ஹங்கேரிய மொழியில் பிறந்த) ஜோசப் புலிட்சரின் விருப்பப்படி ஒரு செய்தித்தாள் வெளியீட்டாளராக சாதித்ததை நினைவு கூறும் வகையில் நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதாவது இந்த, விருதை உருவாக்கிய ஜோசப் புலிட்சர் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர். அந்நாட்டில், நடந்த உள்நாட்டுப்போரால் அமெரிக்காவுக்கு வந்து பத்திரிகையாளர் ஆனவர், பின்னர் செயிண்ட் லூயி போஸ்ட்- டிஸ்பாட்ச், தி நியூயார்க் வேர்ல்டு பத்திரிகையின் உரிமையாளர் ஆனார். சற்று பார்வை குறைபாடுடைய ஜோசப் புலிட்சரின் கட்டுரைகள் பல உலகின் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தனது மரணத்துக்குப்பிறகு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையைத் தொடங்கவும், தனது பெயரால் பெயரால் புலிட்சர் விருது வழங்கவும் தேவையான நிதியை ஒதுக்கி உயில் எழுதினார். 1911-ல் மரணம் அடைந்தார். ஆரம்பத்தில், பத்திரிகைத்துறையினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த புலிட்சர் விருது தற்போது பலத்துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருபத்தி இரண்டு பிரிவுகளில், ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு அமெரிக்க $ 15,000 ரொக்க விருது கொடுக்கப்படுகிறது. பொது சேவை பிரிவில் வெற்றி பெறுபவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இப்பேர்பட்ட புலிட்சர் விருதானது, 1917-ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடகப் பிரிவில் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் மின்னிகியூ போலீஸ் நகர காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் என்பவரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை 17 வயது அமெரிக்க இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவே உலகம் முழுவதும் பரவி, அமெரிக்காவில் போராட்டம் வெடித்ததற்கும், உலகளாவிய அலை எழுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

நீதிமன்றத்திலும் டார்னெல்லா தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். ஓராண்டு விசாரணைக்குப் பிறகு கொலை செய்த காவல் அதிகாரியின் குற்றம் உறுதியாகி தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இனவெறியால் நிகழ்ந்த கொலையை வீடியோவாகப் பதிவு செய்து வெளியுலகிற்குச் சொன்ன இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எமிலியோ மொரநாட்டி என்ற புகைப்பட கலைஞர், இந்த ஆண்டு 2 பிரிவுகளில் ‘புலிட்சர்’ விருதினைப் பெறுகிறார். இவர் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அத்துடன் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சீனாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டதற்காக புலிட்சர் விருது பெறுகிறார். இன ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கியதற்காக ராய்டர்ஸ் நிறுவனத்திற்கும் ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.