ஜம்மு- காஷ்மீர் டூ ஸ்ரீநகர் – ’தர்பார் மாற்றம்’ அரங்கேற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் கொண்டு ஜம்மு காஷ்மீர் அரசு இயங்குகிறது.  இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தலைநகரத்தை மாற்றும் நிகழ்வு ‘தர்பார் மாற்றம்’ என்று அழைக்கப்படுகிறது.

மாநில கவர்னர் மாளிகை உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவது சுமார் 150 ஆண்டுகால நடைமுறையாக இருந்து வருகிறது.

இதன்படி, கடந்த ஆறுமாத காலமாக குளிர்கால தலைநகர் ஜம்முவில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலகம் கடந்த மாதம் 28-ம் தேதி மூடப்பட்டது. இன்று முதல் ஸ்ரீநகரில் செயல்படத் தொடங்கியது.