June 14, 2021

டெய்லி 53, 700 வாகனங்கள் ரிஜிஸ்ட்ரேசன் ஆகும் நம் இந்தியாவில் நல்ல காற்றுக்கு ஆபத்து அதிகரிக்குது!

நாம் வாழ அடிப்படையானது காற்று. சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது நச்சுக் காற்றுகளின் வளி மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன. நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் ஏராளம். இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டாலும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை. அரை கிலோமீட்டர் தொலைவுக்கே வண்டியை எடுத்துச் செல்லும் நாம் எப்படி மாசுபாட்டை குறைக்கப்போகிறோம் என்ரு தெரிய வில்லை

rto aug 19

இதனிடையே கடந்த வருடம் ரூ.1.96 கோடி புதிய மனித வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தினமும் 53,700 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1993 முதல் ஆண்டுதோறும் 10 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2010க்கு பிறகு ஆண்டுதோறும் வாகனங்கள் பதிவு செய்வது அதிகரித்தது. கடந்த 2014ல் 1.94 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது. கடந்த வருடம் உத்தர பிரதேச மாநிலத்தில் தான் அதிகளவு மழை பதிவாகியுள்ளது. உ.பி.,யில் 24.38 லட்சம் வாகனங்களும், மகாராஷ்டிராவில் 19.91 லட்சம் வாகனங்களும், கர்நாடகாவில் 15.15 லட்சம் வாகனங்களும், டில்லியில் 6.27 லட்சம் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பழைய வாகனங்களின் பதிவை ரத்து செய்வது மிகக்குறைவு என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 75 சதவீதம் இரு சக்கர வாகனங்கள். பஸ்களில் ஒரு கி.மீ., தூர பயணத்திற்கு ஆகும் செலவை விட இரு சக்கர வாகனத்தில் செல்வதில் ஆகும் செலவு குறைவு என்பதால் தான் இரு சக்கர வாகனங்களை மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர் எனக்கூறினார்.

போக்குவரத்து துறை சார்ந்த நிபுணர் ஒருவர் கூறுகையில், தற்போது 18.6 கோடியாக உள்ள வாகனங்கள் அடுத்த 25 – 30 வருடங்களில் 35 கோடி வாகனங்களாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஜிடிபியில் 7 சதவீதம் அதிகரிக்கும் போது, போக்குவரத்து துறை சார்ந்த தேவை 10 சதவீதம் அதிகரிக்கும். மக்களுக்கு உகந்த வகையிலும், எளிதான வகையிலும் போக்குவரத்து வசதிகள் செய்யாவிட்டால், மக்கள் அதிகளவில் வாகனங்களை வாங்குவார்கள் எனக்கூறினார்.