நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

த்திய அரசால் இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து பிரதமர் மோடி ரஜினியை ‘தலைவா’ என்று விளித்து பாராட்டி இருக்கிறார்.

தாதா சாகேப் பால்கே என்றவுடன் பெரும்பாலும் பலருக்கும் சினிமா விருதுதான் ஞாபகத்திற்கு வரும். தாதா சாகேப் பால்கே தான் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இந்திய சினிமாவை உலக அளவில் பிரபலப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவர் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைகதை ஆசிரியர் என பன்முகத் தன்மை உடையவராக விளங்கியவர். இவர் திரைபடத்துறையில் மொத்தம் 19 ஆண்டுகள் கோலோச்சி 95 திரைப்படங்களையும், 26 குறும்படங்களையும் உருவாக்கியுள்ளார். அப்படி திரைப்படத்துறையில் சாகேப்பின் பங்களிப்பினைப் போற்றும் விதமாக இந்திய அரசு 1969 முதல் தாதா சாகேப் பால்கே விருதினை இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் பங்களிப்பினை புரிந்தவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.

முன்னதாக, பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன், எல்.வி.பிரசாத், நாகி ரெட்டி உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன்(1996), இயக்குநர் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.” என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தல் சூழலில் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப் aபட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருமே மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் பிரதமர் மோடி , தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலை முறை களிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ள ட்விட் ட்ரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!