May 13, 2021

புயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு!

மழையும் வெள்ளமும் மும்பைக்கு புதுசு இல்ல. ஒவ்வொரு வருசமும் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை ரோட்ல நீந்தி பழகினவங்க அந்தூர் காரங்க. மீடியால ஃபுல் கவரேஜ். அரசாங்கத்தையும் கட்சிகளையும் கண்டபடி திட்டி எழுதுவாங்க பேசுவாங்க. ஆனா ஜனங்க கண்டுக்கவே மாட்டாங்க. பாத்தவங்களுக்கு தெரியும் அவங்களோட இண்டிஃபரன்ஸ் என்ன லெவல்னு.

“யார திட்டி என்ன பிரயோசனம், சொல்லு. எந்த கட்சி வந்தாலும் இது மாற போறது இல்ல. அப்றம் எதுக்கு விமர்சனம் எல்லாம்..?”

பறந்து வந்து தரைல விழுந்து வெடிக்கிற குண்டுகளுக்கு மத்தில லாவகமா சைக்கிள் மிதிச்சு ஸ்கூலுக்கு போற பசங்கள பாலஸ்தீன்ல காட்டுவான் சிஎன்என். அந்த பக்குவம் மும்பை சிடிசன்ஸ்ட்ட வந்திருச்சு.

ஆனா, புயல் அவங்களுக்கு புதுசு.

“பலமான காற்று அப்படியே கடலை ஊருக்குள் கொண்டு வந்தது. அலைகளின் உறுமல் அடிவயிறை கலக்கியது. தேவாலயங்களின் கூர்மையான உச்சி கோபுரங்கள் உடைத்து வீசப்பட்டன. அவற்றை தாங்கி நின்ற பாறாங்கற்கள் தொலைதூரம் பறந்து போயின. இரண்டாயிரம் பிரஜைகள் செத்து போனார்கள்..” அப்டீனு முந்தைய புயல பாத்த போர்ச்சுக்கல் ஆசாமி எழுதி வச்சிருக்காரு.

எழுதினது 1618 ம் வருசம். அப்ப அது பாம்பே. வாழ்ந்த ஜனங்க பத்தாயிரம். இப்ப 2 கோடி. கடைசியா பாம்பே புயல பாத்தது 1882 ம் வருசம். 138 வருசம் ஆயிட்டுது.

புயல் எப்டி அடிக்கும்? எப்டி சமாளிக்கலாம்?னு சென்னைல இருக்ற நண்பர்களுக்கு ஃபோன் போட்டு விசாரிக்க இதான் காரணம்.

வருடாந்திர புயல்ல இருந்து சுனாமி வரைக்கும் பாத்ததுல தெரிஞ்சுகிட்ட பாயின்ட்லாம் சொல்லும்போது
ரெக்காட் பண்ணிக்கிறாங்க.

வீட்ல இருங்க, போதும்னு சொன்னப்ப ஒருத்தர் கேட்டார்.

ரெண்ர மாசமா அப்டிதான இருக்கோம்?

கதிர்