Exclusive

தென்னிந்தியாவின் ஜான்சிராணி “கடலூர் அஞ்சலை அம்மாள்” நினைவு தினமின்று!

டலூர் முதுநகரில் ஓர் எளிய குடும்பத்தில் 1890 ஆம் ஆண்டில் பிறந்தவர் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள். ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். அவரது கணவர் முருகப்பா பத்திரிகையில் முகவராக பணியாற்றியுள்ளார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அம்மாள் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்ப சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவிட்டார். 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் அஞ்சலை பங்கேற்றார். தனது 9 வயது மகள் அம்மாக்கண்ணுவையும், இப்போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றுள்ளார்.

அதன் பிறகு தனது ஒன்பது வயதுக் குழந்தையை சிறையிலேயே வளர்த்தார். சிறையில் இருந்த அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாள் இருவரையும் காந்தியடிகள் சிறைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அம்மாக்கண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மறுபெயரிட்டு தன்னுடன் வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார்.

1931 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு, அஞ்சலை தலைமை தாங்கினார். 1932 ஆம் ஆண்டு மற்றொரு போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பதற்காக இவர் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் இவர் கர்ப்பமாக இருந்தார் என்பதனால் பிணையில் விடுவிக்கப்பட்டார். மகன் பிறந்த இரண்டு வாரங்களுக்குள் அஞ்சலை மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.சிறையிலேயே வளர்ந்த அவரது மகனுக்கு ஜெயவீரன் என பெயரிடப்பட்டது.

ஒருமுறை காந்தி கடலூருக்கு வந்தபோது அஞ்சலை அம்மாளை சந்திக்க முயன்றார். பிரித்தானிய அரசாங்கம் காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைப் பார்க்க தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியடிகளை சந்தித்தார். அஞ்சலையின் துணிவைக் காரணமாகக் காட்டி, காந்தியடிகள் இவரை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைத்தார்.

1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், அஞ்சலையம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டுக்காக பாடுபட்ட தனக்கு தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தவர் அஞ்சலை அம்மாள்.1961 ஆம் ஆண்டு,இதே ஜனவரி 20ல் சீ-மூட்லூர் பகுதியில் அஞ்சலை அம்மாள் காலமானார்.

அவருக்கு கடலூர்-சிதம்பரம் சாலையில் தீர்த்தாம்பாளையம் என்னும் இடத்தில் நிலம் வழங்கப்பட்டு அதற்கு பாசனத்திற்கு தனி வாய்க்காலை அரசு உருவாக்கி அதற்கு அஞ்சலை அம்மாள் வாய்க்கால் என பெயரிட்டது.இன்னும் அதே பெயரிலேயே இந்த வாய்க்கால் அழைக்கப்படுகிறது.

aanthai

Recent Posts

இந்தியாவுக்கே வழிகாட்டிய வைக்கம் மண்ணில் நிற்கிறேன் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

மார்ச் 30, 1924 அன்று, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற கோயில் நகரத்தில், ஒரு அகிம்சைப் போராட்டம் தொடங்கியது,…

12 hours ago

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர்…

13 hours ago

நம் நாட்டில் பரவுவது எக்ஸ்.பி.பி.1.16 புதிய வகை கொரோனா வைரஸ்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை காவு வாங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர்…

15 hours ago

கலாஷேத்ரா பற்றிய வீரதீர பாராக்கிரம கதை இதோ!

சென்னை திருவான்மியூரில் பல நூறு ஏக்கரில் ஆல மர விழுகளுக்கு இடையில் பரந்து விரிந்து கிடக்கிறது ‘கலாஷேத்ரா’ (கலைக்கோவில்). “நான்…

15 hours ago

விடுதலை பாகம் 1 – விமர்சனம்!

ராணுவம் என்று ஒன்று இருப்பதாலேயே நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், போலீஸ் என்ற அழைப்பு இருப்பதாலேயே ஊர் பாதுகாப்பாக இருப்பதாகவும் நம்பும்…

2 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெற விருப்பமா?

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2023 - 24 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன்…

2 days ago

This website uses cookies.