கியூபாவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி போட தொடங்கியாச்சு!

கியூபாவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி போட தொடங்கியாச்சு!

ர்வதேசம் முழுக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடும் பணி, கியூபாவில் தொடங்கியுள்ளது. இதற்காக அப்டாலா மற்றும் சோபிரனா எனும் இரு தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை முடிவடைந்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது கியூபா. அதனைத் தொடர்ந்து நேற்றுமுதல் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியையும் தொடங்கி உள்ளது.

பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டிருப்பதாகவும், பரிசோதனை நடந்து கொண்டிருப்பதாகவும் அறிவித்திருந்தாலும், கியூபாவில் தான் முதல் முறையாக குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!