2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30 ம் தேதி தொடங்குகிறது. அதை ஒட்டி முன்னர் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று காலை ஆஸ்திரேலிய அணி பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் தான் இந்திய அணி இப்போது மும்பையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பட்டியலை வெளியிட்டது. இதில் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த அம்பதி ராயுடு அணியில் இடம்பெறவில்லை அதேபோல ரிஷாப் பண்டும் அணியில் இடம்பெறவில்லை. இந்த முறை உலககோப்பைக்கு தமிழக வீரர்கள் யாரும் இல்லாத அணி செல்லும் என்று பலரும் கூறிவந்த நிலையில் 2 தமிழக வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். ஒருவர் இளம் ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் மற்றொருவர் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். தற்போதும் தமிழக வீரர் அஸ்வின் அணியில் இடம்பெறாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளித்தாலும் , 2 தமிழக வீரர்கள் அணியில் ஆடுவது தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அதன்படி கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தவான், விஜய் சங்கர், தோனி (கீப்பிங்), கேதர் ஜாதவ் அணியில் உள்ளனர். மேலும் குல்தீப் யாதவ், பும்ரா, ஹார்திக் பாண்டியா, முகமது சமி ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். கே.எஸ்.ராகுல், தினேஷ் கார்த்திக், ஜடேஜா, சாஹால் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இனி கோப்பையை வெல்லப் போகும் நம் வீரர்களின் முழு விவரங்கள் இதோ.
1 ஷிகர் தவான்
இந்திய அணியின் நம்பிக்கை தரும் துவக்க வீரர் ஷிகர் தவான் ரோகித் சர்மாவுடன் இணைந்து பல முறை அசாத்தியமான துவக்கத்தை கொடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் மட்டும் 13 போட்டிகளில் ஆடி 420 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் இரண்டு அரை சதங்கள் அடங்கும். இவர் மீது நம்பிக்கை கொண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உலக கோப்பையிலும் கட்டாயம் அசத்துவார் என்ற நம்பிக்கையில் எடுத்துள்ளது.
2 ரோஹித் சர்மா
அதிரடிக்கு பெயர் போன ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளார் 2019 ஆம் ஆண்டில் இவர் இதுவரை 13 போட்டிகளில் ஆடி 556 ரன்கள் குவித்துள்ளார் இதில் ஒரு சதமும் 4 அரை சதங்களும் அடங்கும். உலக கோப்பையில் இவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
3 விராத் கோலி (கேப்டன்)
உலக கோப்பையில் இவர் எவ்வாறு ஆடுவார் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இவரை கண்காணித்து வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ரன் குவிப்பில் இவருக்கு ஈடு இணை இவர் மட்டுமே. இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 42 சதங்களை அடித்துள்ளார். இது ஒரு நாள் அரங்கில் இரண்டாவது அதிகபட்சமாகும். நிச்சயம் உலக கோப்பையிலும் குறைந்தது மூன்று சதங்களையாவது விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.
4 கே எல் ராகுல்
இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பிடிக்க போராடி வரும் கே எல் ராகுல் கிடைக்கும் வாய்ப்புகளை அவ்வப்போது சரியாக பயன்படுத்திக் கொண்டாலும், முக்கியமான கட்டங்களில் செயல்பட தவறி வருகிறார். இதற்காகவே இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் பயன்படுத்த தயங்குகிறது. இருப்பினும் இவருக்கு உலககோப்பையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
5 கேதர் ஜாதவ்
இந்திய அணி நான்காவது இடம் கேதர் ஜாதவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தொடர்களாக அவரின் செயல்பாடு சிறப்பாக இருந்து வருவதாலும் அவரது பந்துவீச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தி கொடுப்பதனாலும் இவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.
6 எம் எஸ் தோனி (விக்கெட் கீப்பர்)
உலக கோப்பையை வென்று தந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த உலக கோப்பையில் விராட் கோலிக்கு பக்கபலமாக இருந்து வெற்றிகளுக்கு வித்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நான்காவது இடத்தில் களம் இறங்கி நடுத்தர பேட்டிங் வரிசையை பலப்படுத்துவார் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. 2019 ஆம் ஆண்டு இவருக்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது இதுவரை 4 அரை சதங்கள் அடித்துள்ள தோனி 9 போட்டிகளில் 327 ரன்கள் குவித்து, 81 சராசரியாக கொண்டுள்ளார்.
7 தினேஷ் கார்த்திக்
நிதாஸ் கோப்பையில் சிறப்பாக ஆடிய காரணத்திற்காகவும் அனுபவமிக்க வீரராக இருப்பதற்காகவும் இந்த இடம் கிடைத்துள்ளது. இன்னொரு விக்கெட் கீப்பிங் தேர்வாக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்
8 விஜய் ஷங்கர்
வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் என்ற தேர்விற்கு விஜய் சங்கர் சரியாக இருப்பதால் இவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது
9 ஹர்டிக் பாண்டியா
கடந்த வருடம் வேகப் பந்து வீச்சிலும் பேட்டிங் அதிரடியில் அசத்திய பாண்டியா உலக கோப்பையிலும் எந்தவித ஆச்சரியம் இன்றி இடம் பெறுகிறார்
10 குல்தீப் யாதவ்
சுழல் பந்து வீச்சில் சாஹால் மற்றும் குல்தீப் இருவரும் இடம்பெற்றுள்ளனர்
11 யூசுவேந்திர சாஹால்
சுழல் பந்து வீச்சுக்காரர்
12 ரவீந்திர ஜடேஜா
இங்கிலாந்து மைதானத்தில் இடது கை பந்து வீச்சாளரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்க முடியும் என நம்பியதாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம் பெற்று சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காகவும் ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்த இடம் கிடைத்துள்ளது
13 புவனேஸ்வர் குமார்
வேகப்பந்து வீச்சு வரிசையில் முகமது சமி, பும்ரா மற்றும் புவனேஸ்வர்குமார் மூவரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்
14 பும்ரா
வேகப்பந்து வீச்சு வரிசையில் முகமது சமி, பும்ரா மற்றும் புவனேஸ்வர்குமார் மூவரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்
15 முகம்மது சமி
வேகப்பந்து வீச்சு வரிசையில் முகமது சமி, பும்ரா மற்றும் புவனேஸ்வர்குமார் மூவரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்