கிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

கிரிக்கெட்  ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019ன் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019; இங்கிலாந்தில் நடைப்பெற்றது வருகிறது. இத்தொடரின் 22-வது லீக் ஆட்டம் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 336 ரன்கள் குவித்தது.

அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 140(113) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக விராட் கோலி 77(65), KL ராகுல் 57(78) ரன்கள் குவித்தனர். இதன் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் மொகமது அமிர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கிடையில் ஆட்டதின் 46-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப் பட்டது. பின்னர் மீண்டும் துவங்கியது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனி 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனையடுத்து 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் 7(18) ரன்களுக்கு வெளியேறிய நிலையில், பாக்கர் ஜாமன் 62(75) மற்றும் பாபர் ஆஜம் 48(57) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

பாகிஸ்தான் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இரண்டாம் விக்கெட்டை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிளியன் திரும்பினர். ஆட்டம் 35-வது ஓவரை எட்டிய நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்திருந்தது.

சில மணி நேரம் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஆட்டம் துவங்கியது. துவக்கத்தின் போது மழையின் காரணமாக ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 302 ரன்களாக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் வீரர்கள் இமாட் வாசிம் மற்றும் சடாப் கான் முடிந்தவரை போராடிய போதிலும் இறுதியாக 212 ரன்கள் வரை மட்டுமே குவிக்க முடிந்தது. இதனையடுத்து இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!