March 27, 2023

தெரியுமா சேதி? மாடு இனப்பெருக்கத்திற்கென விசேஷ டேட்டிங் ஆப் வந்திருக்குது!

இந்த பிரபஞ்சத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றிலும் அவரசமாக செய்து முடிக்கவே  விரும்புகிறார் கள். அது சாப்படு தொடங்கி செக்ஸ் வரைக்கும் சகலத்துக்கும் பொருந்தும்  அதை  கவனத்தில் கொண்டு ‘லைஃப் ஆஃப் லைன்‘ என்றொரு அமைப்பு, இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் ஸ்பீட் டேட்டிங் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. 2016ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு இந்த சேவை களை வழங்கி வருகிறது. இந்த சேவை சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பரவலாக அதிகம பயன்படும் நிலையில் மனிதர்களை தொடர்ந்து தற்போது மாடு இனப்பெருக்கத்திற்க்காக டேட்டிங் செயலி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வேளாண் நிறுவனம் ஒன்று டேட்டிங் செயலியான டிண்டர் போன்று டூடர் (Tudder) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூடர் (Tudder) செயலி மாடு இனப் பெருக்கத்திற்கான ஒரு செயலியாகும். இந்தச் செயலி மூலமாகப் பசு மற்றும் காளை மாடு உரிமையாளர்கள் எளிமையாக இனப்பெருக்கத்திற்கான ஜோடியைத் தேட முடியும் என்று கூறுகின்றனர். டூடர் (Tudder) செயலி மூலமாக இனப் பெருக்கத்திற்கான மாடுகளைத் தேடும் போது இணை மாட்டின் புகைப்படம், வயது, இருப்பிடம் போன்ற முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அந்தந்த உள்ளூர் மாட்டினங்களின் எண்ணிக்கை அதிவேகமாகச் சரிந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், தரமான காளைகள் இல்லாமல் இருப்பது. மற்றொருபுறம் காளைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுவதற்கு மாறாக, செயற்கை கருவூட்டல் முறையில் மாடுகளை இனப்பெருக்கம் செய்வதிலேயே அரசும், வேளாண் நிறுவனங்களும் ஈடுபட்டு வருவதும்தான். அப்படி இனப்பெருக்கம் செய்ய தயாரான கால் நடைகளுக்கு உபயோகமான செயலியே இது.

இதில் முன்னரே குறிப்பிட்டது போல் இணை மாட்டின் முழு ஜாதகத்தையும் அறிந்து டேட்டிங் செய்ய விடலாம் என்பதுதான் விசேஷம். மேலும் இந்தச் செயலியில் ஸ்வைப் செய்யும் போது மாடு இனப்பெருக்கம் செய்வது போன்ற ஒலி கேட்கும்படியும் வடிவமைத்துள்ளனர் என்பதுதான் விசேஷம்.