December 4, 2021

‘கொரோனா’ தடுப்பூசி இன்னும் 73 நாட்களில் தயார்: இந்தியர்கள் அனைவருக்கும் இலவசம்?

உலகம் முழுவதும் கொரோனா வைரசிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் மனிதர்களுக்கான பரிசோதனை அளவில் இருப்பதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி இந்தியரகள் அனைவருக்கும் இலவசமாக கிடைத்துவிடும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடரும் கொரோனா தாக்கத்தால் முடங்கி போய் கடந்த 6 மாதங்களாக தடுப்பூசியை இந்தியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட், 73 நாட்களில் சந்தையில் கிடைக்கும் என்று பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (என்ஐபி) கீழ் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பல சோதனையில் முதல் டோஸ் இன்று போடப்படும். 29 நாட்கள் கழித்து 20 டோஸ் போடப்படும். இதிலிருந்து 15 நாட்களில் பரிசோதனை முடிவின் பலன் – தடுப்பூசி விற்பனை எப்போது என்பது குறித்து அறிக்கை வெளியாகும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன. ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–

உரிமங்கள் வாங்குவதற்கும், இந்தியா மற்றும் பிற 92 நாடுகளில் பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு ராயல்டி கட்டணம் செலுத்துவதற்கும் அஸ்ட்ரா ஜெனெகாவுடன் பிரத்யேக ஒப்பந்தத்தை செய்துள்ளது. மூன்றாம் கட்ட சோதனைகள் நேற்று (22–ந் தேதி) இந்தியாவின் 20 மையங்களில் தொடங்கியது. முக்கியமாக மஹாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பையிலும், குஜராத்தின் ஆமதாபாத்திலும் 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசிகளை நேரடியாக வாங்குவதாக மத்திய அரசு ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்தியர்களுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் சீரம் நிறுவனத்திடமிருந்து 130 கோடி இந்திய குடிமக்களுக்கு 68 கோடி டோஸை அரசாங்கம் கோரியுள்ளது.