May 15, 2021

கொரோனா ; இன்னிய இந்திய + தமிழக தொற்றாளிகள் விபரம்!

கொடூர கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் சுமார் 36லட்சமாக அதிகரித்து கொண்டே போகிறது. உலகம் முழுக்க இரண்டு லட்சத்து 48 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நம் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 2573 பேர் கொரோனாவால் பாதிப்பு என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரை 11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,389 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று வரை 3023பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 527பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப் பட்டோர்களின் எண்ணிக்கை 3550 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 30-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 12773 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 527 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுவரை 153489 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில்இதுவரை 153489 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3550 பேரில் 2392 பேர் ஆண்கள் ஆவர். 1153 பேர் பெண்கள் ஆவர். ஒருவர் திருநங்கை ஆவார்.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1409 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஒருவர் கொரானாவால் உயிரிழந்து உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.