கொடநாடு விவகாரத்தில் டெல்லியில் கைதான மனோஜ், சயான் விடுவிப்பு!

கொடநாடு விவகாரத்தில் டெல்லியில் கைதான மனோஜ், சயான் விடுவிப்பு!

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொள்ளையடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மனோஜ், சயோன் ஆகியோர் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

கோடநாடு கொலை, கொள்ளையில் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ என்பவர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்து, கோடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தும் படி மனு அளித்தார்.

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜெயவர்தன் ஆகியோர் இன்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீதான குற்றச்சாட்டு உள்மைக்கு புறம்பானது எனவும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வியடையும் என தெரிந்தவுடன் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும், வீடியோவின் பின்னணியில் உள்ள சதியை ஆளுநரிடம் விளக்கி கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். .

அதே சமயம் கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். சமீபத்தில் தெஹல்கா நிறுவன முன்னாள் ஆசிரியர் மாத்தியூ சாமுவேல் எடுத்த ஆவணப்படத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆவணப்படம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக போலீசார் தனிப்படை அமைத்து டெல்லி சென்றனர். அங்கு, சயான் மற்றும் மனோஜை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.ஆனாலும் சயான் மற்றும் மனோஜ் இருவரையும் கடந்த்தி அவர்களை துன்புறுத்தி இருவரின் செல் போனை பறித்து விட்டதாகக் கூறி அதை சட்டப்படி எதிர் கொள்வோம் என்று மேத்யூ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!