October 25, 2021

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து 2024ல்தான் கிடைக்குமாம்!

.உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்துவருகின்றனர். இருப்பினும், இதுவரையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 100 சதவீத வெற்றியை எட்டமுடியவில்லை. எப்போது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன.

சர்வதேச அளவில் ஐந்து மருந்து நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் செரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், செரம் நிறுவனவத்தின் இந்தியத் தலைவர் அடர் பூனவல்லா அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘ 2024-ம் ஆண்டுக்கு முன்னதாக உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. குறைந்த காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் அளவுக்கு மருந்து உற்பத்தியை மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்யவில்லை.

இந்த உலகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.கொரோனாவுக்கு இரண்டு சொட்டு தடுப்பு மருந்து தேவைப்பட்டால், உலகம் முழுவதுக்கும் 15 பில்லியன் டோஸ் தேவைப்படும்.

தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதும், அதனை பகிர்ந்தளிப்பதும் முக்கியமானது. பெரும் பாலான வளரும் நாடுகளுக்கு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் பணியை செரம் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. 400 மில்லியன் டோஸ்களுக்கு அதிகமாக தடுப்பு மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான செயல்திட்டத்தை நான் இதுவரையில் எழுத்துவடிவில் பார்க்க வில்லை’ என்று தெரிவித்துள்ளார்.