April 2, 2023

மே 3-க்கு பிறகும் சென்னை உள்ளிட்ட கன்டெய்ன்மென்ட் ஜோனில் கட்டுப்பாடுகள் தொடருமாம்!

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடூர நோயைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,372 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது ஊரடங்கு காலம் மே மாதம் மூன்றாம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது என்பதற்கும் கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதிகளில் கட்டுப்பாடுகளை விலக்கு வதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழகத்தில் உள்ள 388 கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் தெரிவித்தார்.

அதாவது தமிழகத்தின் அறிவிக்கப்பட்டுள்ள 388 கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதிகளில் 239 கிராமப்புறப் பகுதிகளில் உள்ளன. நகர்ப்புறப் பகுதிகளில் 149 மட்டுமே உள்ளன. இந்த தகவலை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து மருந்து துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது என கே சண்முகம் தெரிவித்தார்.

ஒரு சிவப்புப் பகுதியில் ரத்தப்பரிசோதனை மூலம் தோற்று உறுதிசெய்யப்பட்ட குணமடையாத நோயாளி யாரும் இருக்கக்கூடாது. யாருக்கும் கரோனா நோய்க்கான எந்த அறிகுறிகளும் இருக்கக் கூடாது அவர் குணமடைந்த பிறகு 14 நாள் இடைவெளியில் இரண்டுமுறை அவருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அந்த இரண்டு முறையும் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வரவேண்டும். 14 நாள் இடைவெளியில் இந்த இரண்டு ரத்தப் பரிசோதனைகளும் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்று உறுதி செய்ய முடியும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சிவப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மண்டலம் 15 நாட்களில் புதிதாக எந்த கரோனா தொற்றும் ஏற்படாவிட்டால் அந்த பகுதி சிவப்பு பகுதியில் இருந்து தானாக ஆரஞ்சு பகுதியாக மாறும் என்று கே சண்முகம் கூறினார். அதே மாதிரி புது தொற்று இல்லாத நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடித்தால் அந்த ஆரஞ்சு பகுதி தானாக பச்சைநிறப் பகுதியாக மாறும் என்று கே சண்முகம் குறிப்பிட்டார்.

சிவப்புப் பகுதி மொத்தம் 28 நாட்களுக்குப் பிறகுதான் பச்சைப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சண்முகம் விளக்கமளித்தார்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களும் அவற்றுக்கான கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதிகளும் வருமாறு:

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 13 கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதிகள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கிராமப்பு கன்டெய்ன்மென்ட் ஜோன்கள் எதுவும் இல்லை.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதிகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இந்த 18ல் 10 நகர்ப் பகுதிகளிலும் 8 கிராமப் புறப் பகுதிகளிலும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 கன்டெய்ன்மென்ட் ஜோன் பகுதிகள் உள்ளன இதில் 5 நகர்ப்புறப் பகுதிகளில் மீதமுள்ள 5 புறநகர் பகுதிகளிலும் உள்ளன.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் மொத்தம் 27 கன்டெய்ன்மென்ட் ஜோன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் 13 பகுதிகள் நகர்ப்புற பகுதிகள் 16 தொகுதிகள் புறநகர்ப் பகுதிகள்

தஞ்சாவூர் மாநகராட்சியை பொருத்தமட்டில் மொத்தம் ஜோன் 9 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 பகுதிகள் கிராமப்புறத்திலும் 3 நகர்ப்புறத்திலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்தம் 10 பகுதிகள் உள்ளன, இவற்றில் 3 கிராம பகுதிகளில் உள்ளன. 7 பகுதிகள் நகர்ப்புறப பகுதிகளில் உள்ளன,

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 35 கன்டெய்ன்மென்ட் ஜோன்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 19 நகரப் பகுதிகளிலும் 16 கிராமப் பகுதிகளிலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மொத்த பகுதிகளின் எண்ணிக்கை 19 ஆகும் இதில் இரண்டு நகர்ப் பகுதிகளிலும் 17 கிராமப்புறங்களிலும் உள்ளன.

மேலும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ: